Thursday, August 22, 2013

இன்று சென்னைக்கு 375வது பிறந்த நாள்!

இன்று சென்னைக்கு 375வது பிறந்த நாள்!சென்னை நகருக்கு இன்று 375வது பிறந்த நாள். இதையொட்டி, ஒரு வாரத்துக்கு நகரில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை 1639ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி உருவானது. அன்றைய தினம் கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான் கிஸ்டே, ஆன்ட்ரூ கோகன் ஆகியோர் தங்களின் உதவியாளர் பெரிதிம்மப்பா என்பவர் உதவியுடன் செயின்ட் ஜார்ஜ் கோட்டை உள்ள இடத்தை வாங்கினர். அந்த இடத்தை விற்ற அய்யப்பன், வேங்கடப்பன் ஆகியோரின் தந்தை சென்னப்ப நாயக்கன் என்பவரின் நினைவாக கோட்டைக்கு வடக்கே உள்ள ஊர் சென்னப் பட்டினம் என்று அழைக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் 1639ம் ஆண்டில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை கட்டியதைத் தொடர்ந்து சென்னை நகரம் உருவானது.

1646ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சென்னையின் மக்கள் தொகை 19 ஆயிரம். 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சென்னையின் மக்கள் தொகை சுமார் 50 லட்சம் ஆகும். 1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற பின்பு மதராஸ், மாகாணத்தின் தலைநகரானது. சென்னை மாகாணம் 1969ம் ஆண்டு தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நகரின் பெயரான மதராஸ் 1996ம் ஆண்டு சென்னை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

சென்னை தோற்றுவிக்கப்பட்டதாக கருதப்படும் 1639 ஆகஸ்ட் 22ம் தேதியை நினைவூட்டும் வகையில் கொண்டாடப்படும் தினமே சென்னை தினம். இந்த தினம் கடந்த 2004ம் ஆண்டில் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. முதன் முதலில் ஒரு சில கருப்பு வெள்ளை படங்களுடன் 2004ம் ஆண்டு தொடங்கிய இந்த கொண்டாட்டம் இன்று வளர்ச்சியடைந்து புகைப்படக்கண்காட்சி, உணவு திருவிழா, மராத்தான் ஓட்டம் என பல்வேறு பரிமாணங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.

1639-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 22-ந்தேதி சென்னை நகரம் உருவானது. எழும்பூர், திரு வல்லிக்கேணி, புரசைவாக்கம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் உள்ளிட்ட சில கிராமங்கள் மட்டுமே இருந்தன. இவை காலப் போக்கில் சென்னையுடன் இணைக்கப்பட்டன. ஆங்கிலேயர் வசமிருந்த காரணத்தால் உலகின் புதிய கண்டுபிடிப்புகள் சந்தைக்கு வந்த வேகத்தில் சென்னைக்கும் வந்தன. தொலைபேசி, ரெயில், சினிமா, தபால் போன்றவை அடுத்த சில ஆண்டுகளிலேயே சென்னைக்கு அறிமுகமாகின.
1895-ம் ஆண்டு மே 7-ந்தேதி சென்னை நகர வீதிகளில் முதன் முறையாக எலெக்ட்ரிக் டிராம்கள் ஓடின. ஆனால் அந்த சமயத்தில் லண்டனில் கூட எலெக்ட்ரிக் டிராம்கள் அறிமுகமாகவில்லை. தென்னிந்தியாவின் முதல் ரெயில் நிலையமாக ராயபுரம் அமைந்தது. அண்ணாசாலை தபால் நிலைய கட்டிடத்தில் அப்போது எலெக்ட்ரிக் தியேட்டர் இருந்தது. தமிழகத்திலேயே முதல் சினிமாக்கொட்டகை இதுதான்.

ஒருபுறம் எளிய மக்களின் பாட்டுப் புத்தகங்களை விற்பனை செய்த குஜிலிபஜார் பிரபலமாக விளங்கியது. மற்றொரு புரம் சாஸ்த்ரீய சங்கீதம் வளர்த்த இசை சபாக்கள் வேரூன்றி வளர்ந்தன.

1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பின் மதராஸ் மாகாணத்தின் தலை நகரானது சென்னை. சென்னை மாகாணமாக இருந்தது கடந்த 1969ல் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

மெட்ராஸ் என்று அழைக்கப்பட்ட நகரின் பெயர் 1996 ஆம் ஆண்டு சென்னை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. சென்னை நகரின் மக்கள் தொகை கடந்த 1646 ஆம் ஆண்டு 19 ஆயிரமாக இருந்தது. பரந்து விரிந்த மெரீனா கடற்கரை, விவேகானத்தர் இல்லம், மிகப்பெரிய கோவில்கள் என சென்னைக்கு பல அடையாளங்கள் உள்ளன.

இன்று சென்னை மாநகரம் புகழ்பெற்ற கோவில்கள், நட்சத்திர ஓட்டல்கள், தொழில்நுட்ப பூங்காக்கள், பொழுது போக்குவதற்காக தியேட்டர்களுடன் கூடிய ஷாப்பிங் மால்கள் என புதுப்பொலிவுடனும் இளமையுடன் தலை நிமிர்ந்து நிற்கிறது.

கிராமங்கள் ஒன்றினைந்து நகரமாகி, பின்னர் மாநகரமாகி இன்றைக்கு கிரேட்டர் சென்னையாக உயர்ந்து நிற்கிறது. சென்னையின் 375 வது பிறந்த தினத்தை கொண்டாட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அமைப்புக்கள் சென்னை நகரின் வரலாறு தொடர்பான பல நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளன.

சிறப்பு மிக்க சென்னை தினம் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னைக்கு இன்று வயது 375. ‘மெட்ராஸ் டேயை‘ முன்னிட்டு பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து “நம்ம சென்னை‘ என்ற தலைப்பில் சென்னை நகரின் வரலாறு தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.அதன்படி இன்று காலை மைலாப்பூர் பி.எஸ்.சீனியர் செகன்ட்டரி பள்ளியில் புகைப்பட கண்காட்சி நடந்தது. பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள தியாகராயர் கல்லூரியில் வினாடி வினா போட்டியும் நடத்தப்பட்டது.

இதே போல், இன்று மாலை 5.30 மணிக்கு சென்னை தரமணி சி.பி.டி. வளாகத்தில் உள்ள பிரஸ் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா அரங்கத்தில் சென்னை வரலாற்றை விளக்கும் ஆவணப் படங்கள் திரையிடப்படவுள்ளன. இதே போல், ஒரு வாரத்துக்கு சென்னையின் வரலாறு தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

Like us on Facebook  >>>

              அறிவியல்