Wednesday, November 14, 2012

தென் கொரியாவில் அணுஉலைகள் மூடல்: மின் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு

தென் கொரியாவில் அணுஉலைகள் மூடல்: மின் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு





தென் கொரியாவில் பாதுகாப்பு கருதி இரண்டு அணுஉலைகள் மூடப்பட்டதையடுத்து, அங்கு கடும் மின் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
தென்கொரியாவில் மொத்தமுள்ள 23 அணு உலைகளில், 1000 மெகாவாட்டுக்கும் அதிகமான மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இரண்டு அணு உலைகள் பாதுகாப்புக் காரணங்களுக்காக மூடப்பட்டன.

இதனிடையே, அணு உலைகள் அமைப்பதற்கான உதிரி பாகங்களை வழங்கிய சில நிறுவனங்கள், பாதுகாப்பு தொடர்பாக போலி ஆவணங்களை அரசிடம் சமர்ப்பித்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதனால், தென்கொரிய மக்கள் மத்தியில் அணுஉலைகளின் பாதுகாப்பு குறித்து அச்சம் எழுந்துள்ளது.

இதையடுத்து, நாட்டில் உள்ள 23 அணுஉலைகளிலும் ஆய்வு மேற்கொள்ளுமாறு தென்கொரிய அரசு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!