Wednesday, November 14, 2012

மின்னல் அப்படியே நிலத்தில் வீழுமா?

மின்னல் அப்படியே நிலத்தில் வீழுமா? 




 மின்னல் வானில் இருந்து நிலத்தைத் தாக்கும். அதனை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் மின்னல் அப்படியே நிலத்தில் வீழ்ந்தால் எப்படி இருக்கும் ? இதனை எவராவது படம் பிடித்துள்ளார்களா ? இல்லையே ... அப்படி மின்னல் என்ன நிலத்தில், இல்லையேல் மலையில் படார் என வீழ்ந்துவிடுமா என்ன ? அப்படி நடக்க சான்ஸே இல்ல. பிரித்தானியாவின் பிரபல புகைப்பட நிபுணர் ஒருவர் அப்படி ஒரு கற்பனையை மனதில் வளர்த்துள்ளார். இதனைப் புகைப்படமாக்க விரும்பியுள்ளார். ஆனால் அதனை கிராபிக்கில் எடுக்க அவர் விரும்பவில்லை. தத்துரூபமாக இருக்கவேண்டும் என்று நினைத்தார்.

புகைப்படம் எடுக்கும்போது சில மில்லி செக்கனில் படம் பதிவாகிவிடும். அப்படி செய்யாமல் 10 அல்லது 15 நிமிடங்களுக்குப் பின்னர் படம் வதிவாவது போல(ஆனால் 10 நிமிடமாக படம் எடுக்கும் வண்ணத்தில்) அவர் எடுத்துள்ளார். எனவே டாச் லைட் ஒன்றை ஒருவர் எடுத்துக்கொண்டு ஒரு இடத்தில் இருந்து மற்றுமொரு இடத்துக்கு 10 நிமிடம் ஓடினால், அந்த 10 நிமிடத்தையும் அப்படியே போடோவாக எடுக்க அவர் முற்பட்டுள்ளார். அதன் பிரதிபலிப்பே இதுவாகும். பிரமிக்க வைக்கும் இப் புகைப்படங்கள் பிரித்தானியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல ஆங்கில ஊடகங்கள் இப் புகைப்படங்களைப் பிரசுரித்துள்ளது.

உண்மையாகவே மின்னல் நிலத்தில் வீழ்வது போல உள்ளது ஆனால் இது உண்மையில்லை.





No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!