Friday, July 13, 2012


500 மில்லியன் ஆண்டு பழைய பக்ரீரியா உயிர்த்தது !




உலகம் போற போக்கைப் பார்த்தால் ஜுராசிக் பார்க் படம் உண்மையாகிவிடுமோ என்று தோன்றுகிறது. ஜுராசிக் பார்க் என்னும் படத்தில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் வாழ்ந்து பின்னர் முற்றாக அழிந்துபோன டைனசோர்களை உயிரூட்டி இருப்பார்கள். அதாவது அதன் பொரிக்காத முட்டையை எடுத்து அதில் உள்ள டி.என்.ஏ யை பிரித்தெடுத்து டைனசோர்களை உருவாக்கியது போல அக்கதை அமைந்திருந்தது. ஆனால் அது தற்போது சாத்தியமாகும் ஒரு விடையம் என விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். உலகம் போறபோக்கில் பல வம்புகளை நாம் விலைகொடுத்து வாங்கவேண்டி இருக்கும் போலத் தோணுது !

சுமார் 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பக்ரீரியா ஒன்றை விஞ்ஞானிகள் உயிரூட்டியுள்ளனர். அதாவது இறந்த அந்த பக்ரீரியாவை மீண்டு உயிரூட்டியுள்ளனர். இது எவ்வாறு சாத்தியம் என்று கேட்கிறீர்களா ? 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து, ஆனால் இயற்கையாகவே பாதுகாத்து வரப்பட்ட பக்ரீரியா ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து வைத்திருந்தார்கள். அதன் ஜீன்களை தனியே பிரித்து எடுத்து, ஈ கொயில் என்னும் பக்ரீரியாவுடன் இனப்பெருக்கம் செய்யவைத்து, பின்னர் அதன் ஜீன்களை எடுத்து தனியாக ஒரு பக்ரீரியாவை அவர்கள் உருவாக்கியுள்ளார்கள். இது இந்த 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பக்ரீரியாவின் மூலப் பிரதி ஆகும். 

இவ்வாறு உருவாக்கப்பட்ட பக்ரீரியா, தற்போது(நிகழ்காலத்தில்) உள்ள பக்ரீரியாக்களை விட நல்ல சுகதேகியாகவும், வீரியம் மிக்கதாகவும் இருப்பதாக நாசாவின் உயிரியல் விஞ்ஞானப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்த பக்ரீரியா படுவேகமாக இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதாகவும், அது பெருகிக்கொண்டு செல்வதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். இதனால் மனிதர்களுக்கு என்ன ஆபத்து விளையும் என்பது தொடர்பாகவும், இது நல்ல பக்ரீரியாவா இல்லை மனிதர்களுக்கு கேடுவிளைவிக்கும் பக்ரீரியாவா என்றும் அவர்கள் தொடர்ந்தும் ஆராய்ந்து வருகின்றனர்.

படு ஆபத்தான இந்த ஆராய்சியை மேற்கொள்ளும் நாடு எது என்று நாம் சொல்லவே தேவையில்லை ! சாட் சாத் அமெரிக்காவே தான்.

ஏண்டா பக்ரீரியாவோட விளையாடுறீங்க ?








No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!