Monday, July 2, 2012


டாலர், பவுண்டுகளை விட அதிக மதிப்பு

பிராங்க் கரன்சிகளை பதுக்க ஸ்விஸ் வங்கிகள் புதிய வசதி



வரி கட்டாமல் கோடி கோடியாய் சம்பாதிக்கும் பணக்காரர்களுக்கு கறுப்பு பணத்தை பதுக்க, பாதுகாப்பான புதிய ஏற்பாட்டை ஸ்விஸ் நாட்டு வங்கிகள் செய்துள்ளன. அதன்படி, அதிக மதிப்பு கொண்ட ஸ்விஸ் பிராங்க் நோட்டுகளை பாதுகாப்பு பெட்டகங்களில் அடுக்கி வைத்துக் கொள்ளலாம். உலகம் முழுவதும் உள்ள கோடீஸ்வரர்கள் தாங்கள் சம¢பாதிக்கும் கறுப்பு பணத்தை ஸ்விஸ் நாட்டின் ரகசிய வங்கிக் கணக்குகளில் பதுக்கி வருகின்றனர். சமீப காலமாக இந்தப் பணத்தை மீட்க, அமெரிக்கா, ஜப்பான், இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இதனால் பல ஆண்டுகளாக ரகசியமாக வைத்திருந்த வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை வெளியிட வேண்டிய கட்டாயத்தில் ஸ்விஸ் வங்கிகள் உள்ளன. இந்த விவரங்கள் மூலம் கறுப்பு பண முதலைகள் பிடிபட்டு வருகின்றனர். இருந்தாலும் கோடீஸ்வர வாடிக்கையாளர்களை இழக்க விரும்பாத ஸ்விஸ் வங்கிகள், அவர்கள் தங்கள் பணத்தை பதுக்க புதிய ஏற்பாட்டை செய்துள்ளன.
பெரும்பாலும் பணக்காரர்களின் சேமிப்பு வங்கிக் கணக்குகள், டெபாசிட்டுளை குறிவைத்துத்தான் கறுப்பு பண வேட்டை நடந்து வருகிறது. பாதுகாப்பு பெட்டகங்களை யாரும் கண்டுகொள்வதில்லை. அதில் பணத்தை பதுக்கும் புதிய முறையைத்தான் ஸ்விஸ் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளன. அதன்படி, 1000 ஸ்விஸ் பிராங்க் கரன்சி நோட்டை இந்த பெட்டகங்களில் வைத்துக் கொள்ளலாம் என ஊக்குவிக்கின்றன.

ஒரு நோட்டின் மதிப்பு இந்திய ரூபாயில் ஸி60 ஆயிரத்துக்கு சமம். ஆயிரம் கரன்சி நோட்டுகளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்திருந்தால் அதன் மதிப்பே ஸி6 கோடியைத் தொடும். இதுபோக, வைரங்கள், தங்க பிஸ்கட்டுகள், விலை மதிப்புள்ள ஓவியங்கள் ஆகியவற்றையும் பாதுகாப்பு பெட்டகங்களில் வைத்துக் கொள்ளலாம். கறுப்பு பண வேட்டையாடும் பல்வேறு நாடுகளின் அரசாங்கங்கள் பாதுகாப்பு பெட்டகங்களை கண்டு கொள்வதில்லை என்பதால் இந்த ஏற்பாடு.
ஸ்விஸ் வங்கிகளின் இந்த வசதி காரணமாக, 1000 பிராங்க் நோட்டுகளுக்கான தேவை அதிகரித்து, பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பணக்காரர்கள் எல்லோரும் இந்த நோட்டுகளை வாங்க அடித்துக் கொள்வதால் வங்கிகளில் கூட இவை கிடைப்பதில்லை. இதனால் 1000 பிராங்க் நோட்டுகளை அதிகம் அச்சிட ஸ்விட்ஸர்லாந்து அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே புழக்கத்தில் உள்ள மொத்த நோட்டுகளில் இவற்றின் மதிப்பு மட்டுமே 60 சதவீதம். அதை இன்னமும் அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தியா போன்ற நாடுகளில் இருந்து 1000 பிராங்க் நோட்டுகளுக்கு டிமாண்ட் அதிகரித்துள்ளது. பாதுகாப்பு பெட்டகங்களுக்கும் பெரும் போட்டியே நடக்கிறது. எனவே, மிகப் பெரிய பணக்காரர்களுக்கு மட்டுமே பெட்டக வசதி கிடைக்கிறது என ஸ்விஸ் வங்கியான எஸ்என்பி தெரிவித்துள்ளது. அமெரிக்க கரன்சிகளில் அதிக மதிப்பு கொண்டது 100 டாலர் கரன்சி. இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 5,500 தான். இங்கிலாந்து கரன்சிகளில் 50 பவுண்டு நோட்டுதான் அதிக மதிப்பு கொண்டது. இதன் மதிப்பு ரூபாயில் ஸி4,300தான். 500 டாலர், 1000 டாலர், 5,000 டாலர், 10 ஆயிரம் டாலர் நோட்டுகள் 1969க்கு பிறகு புழக்கத்திலேயே இல்லை. எனவேதான் 1000 பிராங்க் நோட்டுகளுக்கு அதிக கிராக்கி எழுந்துள்ளது.





No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!