Monday, July 2, 2012

பூமிக்குத் திரும்பிய சீன விண்வெளி வீரர்கள்



சீனாவின் எதிர்கால தியாங்காங்-1 விண்கலத்தை விண்ணில் நிறுவ 13 நாள் பயணமாக விண்ணுக்குச் சென்ற சீன விண்வெளி வீரர்கள் ஜிங் ஐபிங், லியூ வாங், பெண் விண்வெளி வீரரான லியூ யாங் ஆகியோர் அங்கு வெற்றிகரமாக நிறுவிவிட்டு, இன்று காலை 10 மணியளவில் பூமிக்குத் திரும்பினார்கள். மங்கோலியாவின் உட்பகுதியில் ஷான்ஷூ 9 பாராசூட் மூலம் பூமியில் இறங்கினார்கள். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய விண்வெளி சீன வீரர்கள் தங்களது தியாங்காங்-1 விண்கலத்தை விண்ணில் நிறுவி விட்டதாகவும். அது வசதியாகவும் சிறப்பாகவும் செயல்படுகிறது என்றும் கூறினர். மேலும், தாங்கள் தங்கள் நாட்டைப் பற்றிப் பெருமை கொள்வதாகவும் லியூ யாங் கூறினார்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!