Wednesday, November 6, 2013

WWII-ன் போது பயன்படுத்தப்பட்ட குண்டை செயலழிக்க வைக்க முயற்சி

WWII-ன் போது பயன்படுத்தப்பட்ட குண்டை செயலழிக்க வைக்க முயற்சி




ஜேர்மனியில் இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் அவ்வப்போது கிடைத்து வருகின்றன.
இரண்டாம் உலகப்போர்(1939 - 1945) காலத்தில் பயன்படுத்தப்பட்ட மற்றும் பதுக்கி வைக்கப்பட்ட குண்டுகள் ஜேர்மன் நாட்டின் பல பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டு வருகின்றது.

சிலவேளைகளில் அதிக எடை கொண்ட ராட்சத குண்டுகளும் கிடைப்பதுண்டு. இவ்வாறு எடுக்கப்படும் குண்டுகள் உடனடியாக செயலிழக்க செய்யப்படுவதுண்டு.

இதேபோன்று முக்கிய தொழில் பிரதேசமான ருர் மாகாணத்தில் 4 ஆயிரம் பவுண்ட் எடை கொண்ட குண்டு ஒன்று கிடைத்தது.

இந்த குண்டை செயலிழக்க வைக்கும் முயற்சியில் வெடிகுண்டு நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக அருகில் வசிக்கும் 20 ஆயிரம் மக்கள் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!