Friday, November 1, 2013

உலகின் மிகப்பெரிய வைர வியாபாரியின் மனைவியின் வெள்ளை டிரஸ் கோர்ட் ஏறியது!

உலகின் மிகப்பெரிய வைர வியாபாரியின் மனைவியின் வெள்ளை டிரஸ் கோர்ட் ஏறியது!

உலகின் பெரிய கோடீஸ்வரர்கள் ஒருவரின் மனைவி தமது £600 டிரெஸ் கெட்டுப் போய்விட்டது என்பதற்கு, £200 அதிக இழப்பீடு கேட்டு லண்டன் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் ஜெயித்து, செய்திகளில் இடம்பிடித்துள்ளார். £200 தொகையை வைத்து இவர் ‘டிப்ஸ்’தான் கொடுக்க போகிறார் என்றாலும், இதன் மூலம் கிடைத்திருக்கும் பப்ளிசிட்டிதான், அவருக்கு போனஸ்.

பிரபல வைர வியாபாரியும் கோடீஸ்வரருமான கிராஃப்பின் மனைவி கேத்திதான், கோர்ட்டுக்கு போனவர். இந்த கிராஃப் குடும்பம், உலகின் மிக செல்வந்த வைர வியாபார குடும்பங்களில் ஒன்று. பிரபல Graff diamonds நிறுவனம் இவர்களுடையதுதான்.

வைர மன்னர்கள் என அழைக்கப்படும் இந்தக் குடும்பத்தினரின் வசம்தான், உலகின் அதிகூடிய விலையுடைய வைரம் தற்போது உள்ளது. அந்த வைரத்துக்கு ‘கிராஃப் பிங்க்’ என இவர்களது குடும்ப பெயர் வைக்கப்பட்டுள்ளது. 2010-ம் ஆண்டு இந்த வைரத்தை £15 மில்லியனுக்கு வாங்கி தமது சொத்தாக வைத்திருக்கிறார்கள் இவர்கள்.

இந்த கோடீஸ்வர நிறுவன உரிமையாளரின் மனைவி கேத்தி, லண்டனில் நடைபெற்ற குதிரைப் பந்தயத்தில் கலந்து கொள்ள போகும்போது அணிந்துகொள்ள, £600 விலையில் Armani white suit டிரெஸ் வாங்கினார். 


போட்டோவில், இந்த டிரெஸ் அணிந்திருப்பதை பாருங்கள். அதை டிரைகிளீன் செய்ய வடக்கு லண்டன் ஹம்ப்ஸ்டெட் பகுதியில் உள்ள ‘லுக் நியூ’ டிரைகிளீனர் கடையில் 


கொடுத்தார்.

குதிரைப் பந்தயத்துக்கு போகுமுன் அந்த டிரஸை எடுத்து பார்த்தால், பால்-வெள்ளை நிறம், சாம்பல் நிறமாக மாறிப் போயிருந்தது. அது பற்றி புகார் கொடுத்ததில், கடைக்காரர் மீண்டும் ஒருதடவை அந்த டிரெஸை டிரைகிளீன் செய்துவிட, பாத்திரம் துடைக்கும் துணியின் (dishcloth) கோலத்தில் வந்துவிட்டது டிரெஸ் என்பது கேத்தியின் குற்றச்சாட்டு.

‘பாத்திரம் துடைக்கும் துணி போல’ என வர்ணிக்கப்பட்ட கோலத்தில் உள்ள டிரெஸை, டிரைகிளீனிங் நிறுவன உரிமையாளர் கைகளில் பிடித்திருப்பதைபோட்டோவில் பார்க்கவும்.



இதையடுத்து கோடீஸ்வரி, டிரைகிளீனிங் கடையில் சண்டை போட்டதில், கடை உரிமையாளர் £400 இழப்பீடு தர சம்மதித்தார். ஆனால், டிரெஸின் முழு விலையான £600 இழப்பீடு வேண்டும் என கோடீஸ்வரி ஒற்றைக் காலில் நின்றார். சமரசம் ஏற்படவில்லை.

அதன்பின் வழக்கு போட்டு, நீதிபதி விசாரித்து, 2012-ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த இந்த சம்பவத்துக்கு, டிரைகிளீனர், £600 இழப்பீடு வழங்க வேண்டும் என தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 



போட்டோவில், தீர்ப்பு வந்தபின் கோர்ட்டுக்கு வெளியே மகிழ்ச்சியுடன் கோடீஸ்வரி)

அடுத்த 24 மணி நேரத்துக்குள் இழப்பீட்டு தொகையை செலுத்தி விடுவதாக மீடியாக்களிடம் பேட்டி அளித்துள்ளார், டிரைகிளீனிங் நிறுவன உரிமையாளர் இயன் கோஹன்.

சரி. இந்த விவகாரத்தில் யாருக்கு அதிக பப்ளிசிட்டி கிட்டியுள்ளது? கோடீஸ்வரி கேத்திக்கா? டிரைகிளீனர் இயன் கோஹனுக்கா? அவரது ‘லுக் நியூ’ டிரைகிளீனர் கடைக்கா? Armani டிசைனர் டிரெஸ்ஸூக்கா?

இல்லையாம்! பிரிட்டிஷ் மீடியாக்களின் கணிப்பின்படி, கிராஃப் குடும்பத்துக்கு சொந்தமான Graff diamonds வைர விற்பனை நிறுவனத்துக்கே அதிக பப்ளிசிட்டி கிட்டியுள்ளதாம்!

அடியாத்தீ! எப்படியெல்லாம் பப்ளிசிட்டி கிடைக்கிறது பாருங்கள்!! 

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!