Thursday, October 31, 2013

திடீரென பூமியில் ஏற்படும் துவாரங்கள்: இவை கார், பில்டிங்கை விழுங்கும் அளவு பெரியவை!

திடீரென பூமியில் ஏற்படும் துவாரங்கள்: இவை கார், பில்டிங்கை விழுங்கும் அளவு பெரியவை!



சமீப காலமாக உலகின் வெவ்வேறு நாடுகளில், வெவ்வேறு நகரங்களில் திடீரென பூமியில் துவாரம் ஏற்படுவது பற்றிய செய்திகள் வருவதை நீங்கள் கவனித்திருக்கலாம்.

துவாரம் என்பது, சின்னதாக எலி புகுந்து செல்லும் சைஸ் துவாரங்கள் அல்ல. சில இடங்களில் னிலத்தில் ஏற்படும் துவாரங்கள், பெரிய பில்டிங்கையே விழுங்குகின்றன. வீதிகள், கார்கள் எல்லாம் உள்ளே போய்விடும் அளவுக்கு மிகப் பெரிய துவாரங்களும் ஏற்படுகின்றன. முன்பு எப்போதாவது ஏற்படும் இந்த துவாரங்கள், தற்போதெல்லாம் அடிக்கடி ஏற்படத் தொடங்கியுள்ளன.

இதை, sinkholes என்பார்கள். வெளியே நடக்கும்போது பாதிக்காது, நமக்கு நேரும்போதுதான் பாதிப்பு தெரியும் என்ற விதத்தில், சமீபத்தில் கனடா, மொன்ட்ரியோல் நகரில் திடீரென இந்த நில துவாரம் ஏற்பட்டபோது, கனடாவில் ஒரே பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின்னரே, கனேடிய மீடியாக்களில் sinkholes பற்றி கதை கதையாக பேசத் தொடங்கினார்கள்.

இதுவரை உலகில் ஏற்பட்ட நில துவாரங்களில் மிகப் பெரியது, வென்சூலா நாட்டில் ஏற்பட்டது. சிமா ஹம்போல்ட்டில் ஏற்பட்ட துவாரம், 18,000,000 கியூபிக் மீட்டர் அளவுக்கு பெரியது என்றால், அது எந்தளவு பெரிய துவாரம் என்று ஊகித்துக் கொள்ளுங்கள். மிக ஆழமான துவாரம் ஏற்பட்டது சீனாவின் சொங்குவின் பகுதியில். 2,172 அடி ஆழமான துவாரம் அங்கு ஏற்பட்டது.

அமெரிக்காவில், காலநிலை அட்டகாசமான மாநிலம் என்று கருதப்படும் புளோரிடாவில்தான் இந்த துவாரங்கள் அடிக்கடி ஏற்படுகின்றன. ஐரோப்பாவில், இத்தாலியில் அதிகம் ஏற்படுவது வழக்கம்.

நிலத்தில் துவாரம் என்று நாம் சொல்லும்போது, ஏதோ பொட்டல் வெளியில் பூமி வெடிப்பது என்று நினைக்காதீர்கள். பல துவாரங்கள், நகரங்களில், மக்கள் வசிக்கும், நடமாடும் பகுதிகளில் ஏற்படுகின்றன என்று சொன்னால், அதை கற்பனை செய்வது கடினமாக இருக்கலாம். போட்டோ பார்க்கலாமா?

உலகின் வெவ்வேறு பகுதிகளில் திடீரென பூமியில் sinkhole துவாரங்கள் ஏற்பட்டபோது எடுக்கப்பட்ட போட்டோக்கள் சிலவற்றை தருகிறோம். ஒவ்வொன்றாக பாருங்கள். அப்போதுதான் நாம் குறிப்பிடும் அந்த துவாரங்களின் நிஜ உருவத்தை தெரிந்து கொள்ள முடியும்.







No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!