Tuesday, November 12, 2013

ஒரே நாளில் ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.50 ஆயிரம் கோடி விற்பனை: சீனாவின் புதிய சாதனை

ஒரே நாளில் ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.50 ஆயிரம் கோடி விற்பனை: சீனாவின் புதிய சாதனை 

ஒரே நாளில் சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்து சீன ஆன்லைன் கம்பெனி ஒன்று சாதனை புரிந்துள்ளது. 

சீனாவின் புகழ்பெற்ற ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்டான ‘டி மால்' நேற்று ஒரேநாளில் ரூ 50 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் செய்து புதிய சாதனையை புரிந்துள்ளது. 

நேற்று முன் தினம் நள்ளிரவில் தனது சாதனை முயற்சி விற்பனையை தொடங்கியது டி மால். விற்பனையைத் தொடங்குவதற்காகக் காத்திருந்த மக்கள் உடனடியாக போட்டி போட்டுக் கொண்டு பொருட்களை முன்பதிவு செய்யத் தொடங்கினர். 

இதனால், நேற்று ஒரேநாளில், இந்த ஆன்லைன் வெப்சைட் மூலம், சீனா முழுவதும் சுமார் 10 லட்சம் பேர் தேவையானவற்றை வாங்கினர். இதன் மூலம் ஒரே நாளில் ரூ.50 ஆயிரம் கோடிக்கு பொருட்கள் விற்பனை ஆனதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இது சீனா வரலாற்றில் மிகப் பெரும் சாதனையாக கருதப்படுகிறது. ஏனெனில் இதற்கு முன்னர் ஒரே நாளில் ரூ.30 ஆயிரம் கோடி அளவில் விற்பனை ஆனது தான் சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!