Tuesday, November 12, 2013

5 கிமீ நீளத்தில் ஜொலிக்கும் ஐசான் வால் நட்சத்திரம் 28ம் தேதி பார்க்கலாம்

5 கிமீ நீளத்தில் ஜொலிக்கும் ஐசான் வால் நட்சத்திரம் 28ம் தேதி பார்க்கலாம் 




புதுக்கோட்டையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், மத்திய அரசின் விஞ்ஞான தொழில் பரிமாற்றக் குழு சார்பில் ‘ஐசான்‘ வால் நட்சத்திரம் குறித்த மாநில கருத்தரங்கம் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற  கல்பாக்கம் அணுமின்நிலைய விஞ்ஞானி பார்த்தசாரதி, வானியல் நிபுணர் மோகனா ஆகியோர் கூறியதாவது:

ஆண்டுதோறும் ஓரிரு வால் நட்சத்திரங்கள் சூரியனுக்கு அருகில் வருகின்றன. இது அரிய நிகழ்வு. அவற்றை கண்ணால் காண முடியும். கடந்த 400 ஆண்டுகளில் 5000 வால்நட்சத்திரங்களை வானியல் அறிஞர்கள் கண்டு, அதன் வட்டப்பாதையை அறிந்தனர். புதிய வால் நட்சத்திரமான 5 கி.மீ நீளமுள்ள பிரகாசமான ஐசான், வரும் 28ம் தேதி இரவு 11.55 மணிக்கு சூரியனுக்கு மிக அருகில் வருகிறது. அதை வெறும் கண்களால் காணலாம். 29ம் தேதி மாலை வானின் மேற்குப் பகுதியில் பிரகாசமான ஒளியுடன் காண முடியும். டிசம்பர் முதல் வாரம் வரை வெறும் கண்களாலும், தொலைநோக்கி உதவியுடனும் காணலாம். தமிழகத்தில் ஒரு கோடி பேரை ஐசான் வால் நட்சத்திரத்தை காண வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

வரும் 18 முதல் 25ம் தேதி வரை கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, சென்னை, நாகை ஆகிய நான்கு இடங்களில் இருந்து ஐசான் குறித்த வேன் பிரசாரம் நடைபெற உள்ளது. பிரசாரக் குழுவில் 20 விஞ்ஞானிகள் இருப்பர்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!