Tuesday, June 18, 2013

இரு கால்களையும் இழந்த பெண் கடலில் நீந்தி சாதனை

இரு கால்களையும் இழந்த பெண் கடலில் நீந்தி சாதனை


பிரிட்டனைச் சேர்ந்த சூ ஆஸ்டின் என்பவருக்கு  16 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட மர்ம காய்ச்சலால் இரு கால்களும் செயல் இழந்தன.
எனினும், நம்பிக்கையை கை விடாத ஆஸ்டின் தான் கற்றிருந்த நீச்சல் மீது மிகவும் ஆர்வம் கொண்டிருந்ததனால், மீண்டும் முன் போலவே நீந்த வேண்டும் என அவர் ஆசைப்பட்டார்.

ஆஸ்டின் தனக்கு வேண்டிய சக்கர நாற்காலியை தானே, பிரத்யேகமான முறையில் வடிவமைத்து அதன் மூலம் மீண்டும் நீச்சல் பழகி தற்பொழுது கடலிலும் நீந்தி சாதனை படைத்துள்ளார்.

இவர் தயாரித்த நாற்காலியில், விசேஷ காஸ் நிரப்பிய உருளைகள் பொருத்தப்பட்டு உள்ளதுடன் கால்களின் உதவி இல்லாமல் நீந்துவதற்கு ஏதுவான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நாற்காலியின் மூலம், 360 டிகிரி கோணத்திலும் சுழல முடியும்.

இச் சாதனையினால் தான் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும், தரையில் இருப்பதை விட, தண்ணீரில் இருப்பதையே தான் விரும்புவதாகவும் ஆஸ்டின் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!