Wednesday, May 29, 2013

செத்தது யாரு, ராமசாமியா, குப்புசாமியா... ஆயிரம் ரூபாய் பெட்!


செத்தது யாரு, ராமசாமியா, குப்புசாமியா... ஆயிரம் ரூபாய் பெட்!


பேஸ்புக், பீட்சா காலம் போய் இப்போது சூதாட்ட காலம் வந்து விட்டது. எதற்கெடுத்தாலும் பெட்தான்.. கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி, வேறு எதுவாக இருந்தாலும் சரி. அந்த வகையில் உ.பி.மாநிலம் வாரணாசியில் செத்த பிணங்களை வைத்து பெட் கட்டி பிரளயம் ஏற்படுத்தி வருகிறார்கள்.

கேட்கவே கொஞ்சம் பீதியாக இருக்கிறதல்லவா, உண்மைதான். சுடுகாட்டையும் விடவில்லை இந்த சூதாட்டக்காரர்கள். செத்தவர்களை வைத்து விதம் விதமாக டிசைன் டிசைனாக பெட் கட்டி கல்லாக் கட்டி வருகிறார்களாம். அதைப் பற்றி அறிய வாங்க சுடுகாட்டுக்கு போய்ட்டு வரலாம்...

மணிகர்னிகா சுடுகாடு உங்களை அன்புடன் வரவேற்கிறது 

வாரணாசியில் உள்ள பிரபலமான சுடுகாடுதான் இந்த மணிகர்னிகா சுடுகாடு. எப்பவுமே பிசியாக உள்ள சுடுகாடாம் இது. எப்பப் பார்த்தாலும் யாராவது எரிந்து கொண்டிருப்பார்கள் - அதாவது பிணங்கள் எரிந்தவண்ணம் இருக்குமாம்.


அதிகாலையில் சுப வேளையில்.. 

சூதாட்டம் இந்த சுடுகாட்டில்தான் சூதாட்டக்காரர்களும் குவிகிறார்கள். அதுவும் அதிகாலையில்.


 பாடி வருது.. பெட்டை ஆரம்பி 

அங்கு தகனத்திற்காக கொண்டு வரப்படும் பிணங்கள் குறித்து அறிந்ததும் பெட்டை ஆரம்பிக்கிறார்கள்


இப்ப சொல்லு ராமசாமியா.. ராமாயியா... 

கொண்டு வரப்படும் பிணம் ஆணா, பெண்ணா என்று ஒரு பெட். பிணத்தை எந்த திசையிலிருந்து கொண்டுவருகிறார்கள் என்று இன்னொரு பெட். பிணத்தை எந்த வண்டியில் வைத்துக் கொண்டு வருகிறார்கள் என்று ஒரு பெட். எந்தக் கட்டையை வைத்து பிணத்தை எரிக்கப் போகிறார்கள் என்றும் ஒரு பெட்.


காலங்கார்த்தாலே.. ஒருவேலை இல்லாமே 

அதிகாலை 4 மணிக்கெல்லாம் பெட் ஆரம்பித்து விடுமாம். அடுத்து எந்தப் பிணம் வரப் போகிறது என்று ஆரம்பித்து இந்த பெட் போகுமாம்.


குறைந்தது ரூ.1000 

குறைந்தது ரூ. 1000க்கு பெட் வைக்கிறார்கள். அதிகபட்சம் ஒரு ஆள் ஒரு நாளைக்கு ரூ. 6000 முதல் 10,000 வரை சம்பாதிக்கிறார்களாம் இந்த சூதாட்டம் மூலம்.


போலீஸாரும் உடந்தை 

சில நேரங்களில் விஐபிக்கள் யாராவது மண்டையைப் போட்டு விட்டால் போலீஸாரும் இந்த சூதாட்டக்காரர்களுக்கு உதவுவார்களாம். அதாவது செத்த விஐபி குறித்த முக்கியத் தகவல்களை தங்களுக்கு வேண்டப்பட்ட புக்கிகளுக்கு லீக் செய்து அதை வைத்து பெட்டில் ஈடுபடுத்தி அவர்களும் கமிஷன் வாங்கிக் கொள்வார்களாம்.





No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!