Wednesday, May 29, 2013

வங்கக் கடலின் வடமேற்கில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

வங்கக் கடலின் வடமேற்கில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!




தமிழகத்தில் இருந்து 1000 கி.மீ தொலைவில் வங்கக் கடலின் வடமேற்குப் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது.

அந்தமான் அருகே சில் வாரங்களுக்கு முன்பு உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுவடைந்து மகாசேன் புயலாக மாறியது. இதன் மூலம் தமிழகத்தில் கணிசமான அளவு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புயல் திசை மாறி வங்கதேசம், மியான்மர் அருகே கரையைக் கடந்தது.

இந்த நிலையில் வங்கக் கடலின் வடமேற்குப் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது தொடக்க நிலையில் உள்ளது. அனேகமாக அடுத்த ஒரிரு நாள்களில் இது வலுப்பெறலாம். வங்கக் கடலில் தற்போது புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் சில நாட்களுக்காவது மழை பெய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த வானிலை மைய அதிகாரிகள், தற்போதைய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது நகரும் திசையைப் பொருத்தே மழை வாய்ப்பு குறித்து கூற முடியும். ஆனாலும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் தமிழகத்தில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கிறோம் என்கின்றனர்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!