Wednesday, May 22, 2013

டம்ப்ளர் இணையத்தளத்தை ரூ. 5,000 கோடிக்கு வாங்கும் யாகூ!

டம்ப்ளர் இணையத்தளத்தை ரூ. 5,000 கோடிக்கு வாங்கும் யாகூ!



பிளாக்கிங் செய்ய உதவும் டம்ப்ளர் இணையத்தளத்தை யாகூ நிறுவனம் ரூ. 5,000 கோடிக்கு வாங்க திட்டமிட்டுள்ளது.

இன்டர்நெட்டில் 18 முதல் 24 வயதினரிடையே மிகப் பிரபலமாக உள்ள பிளாக்கிங் இணையத்தளமான டம்ப்ளரை வாங்குவதன் மூலம் இளம் வயதினரை ஈர்க்க யாகூ திட்டமிட்டுள்ளது. 2007ம் ஆண்டு நிறுவப்பட்ட டம்ப்ளர் இணையத்தளத்தில் 107 மில்லியன் பிளாக்குகள் உள்ளன. 12 மொழிகளில் ஆன இந்த இணையத்தில் 50 பில்லியன் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 13 மில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டியுள்ள இந்த நிறுவனம் இந்த ஆண்டில் 100 மில்லியன் டாலர்களை ஈட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. வெறும் 175 ஊழியர்களைக் கொண்டு இந்த இணையத்தளம் இந்த சாதனையைச் செய்துள்ளது. இந் நிலையில் இதை வாங்க யாகூ திட்டமிட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!