Thursday, January 24, 2013

பூக்களைத் தின்று கோர்ட்டில் ஆஜரான ஆஸ்திரேலிய ஆடு... ஏற்கனவே பீரடித்து சிக்கியதாம்!

பூக்களைத் தின்று கோர்ட்டில் ஆஜரான ஆஸ்திரேலிய ஆடு... ஏற்கனவே பீரடித்து சிக்கியதாம்!




ஆஸ்திரேலியாவின் அருங்காட்சியகம் ஒன்றில் பூக்களை சாப்பிட்ட குற்றத்திற்காக ஆடு ஒன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அதிசய சம்பவம் நிகழ்ந்தது.

ஜிம்தேசமால் என்ற நகைச்சுவை நடிகர் கேரி என்ற பெயர் கொண்ட ஆடு ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார். இவர் சமீபத்தில் சிட்னியில் உள்ள அருங்காட்சியகத்திற்கு சென்ற போது அவருடன் சென்ற ஆடு அங்கு வளர்க்கப்பட்டிருந்த பூச்செடிகளை தின்றுவிட்டதாம். இதனையடுத்து அந்த அருங்காட்சியகத்தின் மேலாளர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.

அந்த புகாரின் பேரில் நடிகர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், ஆட்டையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடிவு செய்தனர். இதனால் நீதிமன்றத்துக்கு தனது எஜமானருடன் வந்த ஆடு தலையில் தொப்பியுடன் கம்பீரமாக நடந்து வந்தது. ஆனால் பாவம் ஆடு பூக்களை தின்றதை நிரூபிக்க முடியவில்லை. இதனால் நடிகரும், ஆடும் விடுவிக்கப்பட்டனர். தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என்ற சந்தோஷத்தில் நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்தனர்.

வீடுகளிலும், காட்டிலும், ஏன் விலங்குகள் காட்சியகங்களில் மட்டுமே ஆட்டினை பார்த்திருந்தவர்கள் நீதிமன்றத்தின் வாசல்படியில் ஆடு நின்றிருந்ததைப் பார்த்து ஏராளமானோர் அதிசயித்துப் போனார்கள். போட்டி போட்டு புகைப்படமும் எடுத்தனர்.

இதே ஆடுதான் கடந்த ஆண்டு பீர் குடித்த வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தில் ஆஜரானதாம். அடிக்கடி கோர்ட் படி ஏறி இறங்குவதால்தான் அச்சமின்றி நீதிமன்றத்திற்கு ஆடு வந்து செல்கிறது என்று பேசிக்கொண்டனர் அங்கிருந்த வழக்கறிஞர்கள்

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!