Tuesday, January 22, 2013

விமான நிலையங்களில் உடல் அங்கங்களை காட்டும் எக்ஸ்-ரே ஸ்கேனர்களை அகற்ற யுஎஸ் முடிவு

விமான நிலையங்களில் உடல் அங்கங்களை காட்டும் எக்ஸ்-ரே ஸ்கேனர்களை அகற்ற யுஎஸ் முடிவு


விமானநிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள உடலின் அங்கங்களை பிரதிபலிக்கும் எக்ஸ்-ரே ஸ்கேனர்களை அகற்ற அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.

கடந்த 2009-ம் ஆண்டு அமெரிக்காவின் டெட்ராய்ட் விமான நிலையத்தில் தீவிரவாதி ஒருவன், நின்றிருந்த விமானத்தில் வெடிகுண்டை பொருத்தி பரபரப்பை ஏற்படுத்தினான். இதனையடுத்து, அமெரிக்காவில் உள்ள அனைத்து விமானநிலையங்களிலும் நவீனராக எக்ஸ்-ரே ஸ்கேனர்கள் பொருத்தப்பட்டன. இது சாதாரண ஸ்கேனர்களைப் போல இல்லாமல் உடலின் சதைப்பகுதிகளும் துல்லியமாக திரையில் தெரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

நவீன ஸ்கேனர்களில் பதிவாகும் காட்சிகளை விமானநிலைய ஊழியர்கள், சோதனைக்கு பிறகும் போட்டு பார்க்கக்கூடும். எனவே, இந்த ஸ்கேனர்களை அகற்ற வேண்டும் என்று சிலர் கூறினர். எனவே இந்த வகையிலான சோதனைக்கு பெண்கள் உள்பட பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து இந்த ஸ்கேனர்களை அகற்ற அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அவற்றை சிறைத்துறை அல்லது ராணுவ நிர்வாகத்தில் பயன்படுத்தப்படும் என தெரிகின்றது.

இந்நிலையில், உடலின் சதைப்பகுதிகளை தவிர்த்து, எலும்புக்கூடு மற்றும் உலோகங்களால் ஆன பொருட்களை மட்டும் திரையில் காட்டும் புதுவகை ஸ்கேனர்களை வரும் ஜுன் மாதத்திற்குள் பொருத்த அமெரிக்க போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!