Monday, October 22, 2012

அம்பாறை கடலில் பிடிபட்ட இராட்சத சுறா மீன்கள்! ,7,000 பாரை மீன்கள்! பெறுமதி ஒரு கோடி ரூபா

அம்பாறை கடலில் பிடிபட்ட இராட்சத சுறா மீன்கள்! - ஒலுவில் கடலில் 7,000 பாரை மீன்கள்! பெறுமதி ஒரு கோடி ரூபா





அம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சின்னப் பாலமுனை பகுதியில் இரு இராட்சத சுறாக்கள் கடந்த வியாழக்கிழமை மீனவர்களிடம் சிக்கின.

கடலுக்குச் சென்றிருந்த ஆழ்கடல் மீன்பிடி தொழிலாளர்களின் வலையிலேயே இச் சுறாக்கள் பிடிபட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.



இந்த 02 சுறாக்களும் சுமார் 1000 கிலோகிராம் எடையுடையவை என்று கூறப்படுகிறது.

இந்தச் சுறாக்கள் சுமார் 03 லட்சம் ரூபாவுக்கு விற்பனையாகியதாக குறித்த மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒலுவில் பிரதேச கடற்றொழிலாளிக்கு ஒரே தடவையில் 7,000 பாரை மீன்கள்!

ஒலுவில் பிரதேசத்தில் கடற்றொழிலாளி ஒருவருக்கு சொந்தமான தோணிகளுக்கு ஒரே தடவையில் சுமார் 7,000 பாரை மீன்கள் சிக்கின.

ஒவ்வொன்றும் 6 முதல் 7 கிலோ கிராம் எடையுடைய இந்த மீன்களின் மொத்தப் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பிரதேச வரலாற்றில் இவ்வாறு அதிகளவான மீன்கள் பிடிபட்டமை இதுவே முதல் தடவை என இங்குள்ள மீனவர்கள் கூறுகின்றனர்.

சாதாரண நாட்களில் 7 கிலோகிராம் எடையுடைய பாரை மீனொன்று சுமார் 2,000 ரூபாவுக்குக் குறைவில்லாமல் விற்கப்படும் நிலையில் 1,300 முதல் 1,500 ரூபாய் வரையிலேயே விற்கப்பட்டன.






















No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!