Thursday, October 25, 2012

18 மாதங்களாக அதிரடி நடவடிக்கை: இங்கிலாந்தில் 500க்கும் அதிக டுபாக்குர் பல்கலைகள் மூடல்

18 மாதங்களாக அதிரடி நடவடிக்கை: இங்கிலாந்தில் 500க்கும் அதிக டுபாக்குர் பல்கலைகள் மூடல்





இங்கிலாந்தில் இயங்கி வந்த 500க்கும் அதிகமான போலி பல்கலைக்கழகங்களை அதிகாரிகள் அதிரடியாக மூடியுள்ளனர். இங்கிலாந்தில் உள்ள பல்கலைக்கழங்களில் பல நாடுகளை சேர்ந்த மாணவர்கள் ஆயிரக்கணக்கில் படிக்கின்றனர். ஆண்டுதோறும் இவர்களின் வருகை அதிகரித்து வருகிறது.

ஐரோப்பிய யூனியனை சேராத நாடுகளில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 2வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், இங்கிலாந்தில் இயங்கி வரும் பல்கலைக்கழகங்களில் எல்லை பாதுகாப்பு ஏஜென்சி மற்றும் குடியேற்ற துறை அதிகாரிகள் கடந்த 18 மாதங்களாக தீவிர ஆய்வு நடத்தி வருகின்றனர்.

அப்போது, போலியாக இயங்கிய 500க்கும் அதிகமான பல்கலைக்கழகங்களை மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளனர். இதன் மூலம் இந்தியா உள்பட பல நாடுகளை சேர்ந்த மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பல்கலைக்கழகங்களின் தலைவர் எரிக் தாமஸ் கூறுகையில், 'கடந்த ஆண்டு ஏராளமான பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டு விட்டன. எனினும், வெளிநாட்டு மாணவர்களின் வருகையில் எந்த பாதிப்பும் இல்லை. மூடப்பட்ட பல்கலைக்கழகங்களை சேர்ந்த மாணவர்களுக்கு வேறு பல்கலையில் இடம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றார்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!