Wednesday, August 29, 2012

கொரிய கடலில் கொந்தளிப்பு: கப்பல்கள் பாறைகளில் மோதி மூழ்குகின்றன!

கொரிய கடலில் கொந்தளிப்பு: கப்பல்கள் பாறைகளில் மோதி மூழ்குகின்றன!





கொரியக் கடலில் ஏற்பட்ட கடும் சூறாவளி காரணமாக, 5 மீனவர்கள் உட்பட 8 பேர் மரணமடைந்தனர். எண்ணிக்கை தெரியாத மீனவர்களை காணவில்லை, அல்லது கரை திரும்பவில்லை. கடல் கொந்தளிப்பு காரணமாக இரு தென் கொரிய மீன்பிடி கப்பல்கள் கரையோரம்வரை வந்து, பாறைகளில் மோதின.

அத்துடன், கொரியக் கடலில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த சீன கப்பல்களும் சூறாவளியில் சிக்கிக் கொண்டன. சீன காப்பல்களில் இருந்த 12 மீனவர்களை தென் கொரிய கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர். 10 மீனவர்கள் காணாமல் போயினர். இவர்கள் வந்த இரு கப்பல்கள் மற்றும் ஒரு நடுத்தர அளவுள்ள படகு ஆகியவை பாறைகளில் போதி, மூழ்கின.

தென் கொரியாவின் தென்பகுதியில் உள்ள ஜெஜூ தீவு அருகே இந்த சம்பவம் நடைபெற்றது.

பொலாவென் என பெயரிடப்பட்டுள்ள சூறாவளி காரணமாக, தென்கொரியாவின் பல பகுதிகளில் மின்சாரம் கடைப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான தென்கொரியர்கள், கடந்த 24 மணி நேரமாக மின்சாரம் இல்லாமல் தவிக்கின்றனர். தலைநகர் சோலில் உள்ள சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து நடத்த துவங்கியிருந்த கூட்டு ராணுவ பயிற்சிகளும் பாதியில் நிறுத்தப்பட்டன.

இன்று (புதன்கிழமை) காலையும், ஜெஜூ தீவு பகுதியில் கடல் கொந்தளிப்பு அதிகமாக உள்ளது. கரைக்கு வர முயன்ற இரு படகுகள் மீண்டும் நடுக் கடலுக்கு இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், தென் கொரிய கடற்படையினர். சிறப்பு துப்பாக்கி ஒன்றால் சுட்டு, கயிற்றை படகில் போய் விழவைத்து, படகை கரைக்கு இழுத்து வந்தனர்.

இந்த நடவடிக்கையின்போது, படகுகளில் இருந்த 18 மீனவர்களில் 6 பேர் கடலில் வீழ்ந்தனர். 12 பேர் கரை சேர்ந்தனர்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!