Wednesday, August 29, 2012

14,000 கி.மீ தூரம் சென்று தாக்கும் அதிநவீன ஏவுகணையை பரிசோதித்தது சீனா


14,000 கி.மீ தூரம் சென்று தாக்கும் அதிநவீன ஏவுகணையை பரிசோதித்தது சீனா





கண்டம் விட்டு கண்டம் செல்வதும், அணு குண்டுகளுடன் 14,000 கி.மீ தூரம் பாய்ந்து சென்று தாக்கும் திறன் கொண்டதுமான அதிநவீன புதிய ஏவுகணையை வெற்றிகரமாக சீனா சோதனை செய்து பார்த்துள்ளது.
இது குறித்து சீன அரசின் டிவி சேனலில் கூறப்பட்டுள்ள செய்தியில், சுமார் 14,000 கி.மீ தூரம் பாய்ந்து செல்லக்கூடிய டோங்பெங்க்-41 ரக ஏவுகணை கடந்த மாதம் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.



இது அணு குண்டுடன் கண்டம் விட்டு கண்டம் செல்லக்கூடிய புதிய தலைமுறை ஏவுகணையாகும். இந்த ஏவுகணையில் 10 அணுகுண்டுகளை பொருத்தி அனுப்பி வைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன் போது, சீனாவின் பெண் விஞ்ஞானிகள் குழுவினர் வாகனங்களில் சென்று ஏவுகணையை ஏவுவதற்கான பணிகளை செய்யும் அரிய வீடியோ காட்சியும் ஒளிபரப்பப்பட்டது.



சீனா நீர்மூழ்கி கப்பலிலிருந்து அமெரிக்கா வரை சென்று தாக்கக்கூடிய அதிநவீன ஏவுகணையை தயாரித்து வருகிறது என்று அமெரிக்காவின் “நியூயார்க் டைம்ஸ்” என்ற பத்திரிகையில் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து இச்செய்தியை சீனா வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது.





No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!