Monday, August 27, 2012

ஆம்ஸ்ட்ராங் அமெரிக்க ஹீரோ - அதிபர் ஒபாமா



ஆம்ஸ்ட்ராங் அமெரிக்க ஹீரோ -  அதிபர் ஒபாமா 



 


நிலவில் முதன் முதலில் கால் பதித்த மனிதர் என்ற பெருமையை பெற்ற அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங்(82), அமெரிக்க ஹீரோக்களில் ஒருவர் என்று அதிபர் பராக் ஒபாமா புகழாரம் சூட்டியுள்ளார். கடந்த 1969ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி, நிலவில் முதல் முறையாக தரையிறங்கி, மனித குலத்துக்கே பெருமை சேர்த்தவர் நீல் ஆம்ஸ்ட்ராங்.

விண்வெளி பணியில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், அவர் தனது குடும்பத்தினருடன் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அதிகம் அதிர்ந்து பேசாத மனிதர் அவர். சின்சினாட்டியில் உள்ள வீட்டில் அவர் வசித்து வந்தார். ஓய்வு பெற்ற பின்னர் அவரை, அரசியல் களத்துக்கு இழுப்பதற்காக பலர் போட்டியிட்டனர். இதற்காக பல ஆசைகளையும் காட்டினர். ஆனால், எதையும் ஏற்றுக் கொள்ள அவர் மறுத்து விட்டார்.

இதய நோயால் பாதிக்கப்பட்ட அவருக்கு இம்மாத தொடக்கத்தில், அறுவை சிகிச்சை நடந்தது. ஆனால், நேற்று முன்தினம் திடீரென உடல்நிலை மோசமாகி அவர் இறந்தார். இதை குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தனர். மறைந்த நீல் ஆம்ஸ்ட்ராங்குக்கு உலகம் முழுவதும் இருந்து முக்கிய தலைவர்கள் இரங்கல் செய்தி வெளியிட்டு வருகின்றனர்.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘‘அமெரிக்க ஹீரோக்களில் ஒருவர் நீல் ஆம்ஸ்ட்ராங். அவருடைய வாழ்நாள் காலத்தில் மட்டுமல்லாமல், எப்போதுமே அவர் ஹீரோவாகத்தான் இருப்பார். 1969ம் ஆண்டு அப்போலோ,11 விண்கலம் மூலம் அவரும், சக விண்வெளி வீரர்களும் நிலவுக்கு பயணித்தபோது, ஒட்டுமொத்த அமெரிக்காவின் அபிமானத்தையும் அவர்கள் பெற்றுச் சென்றனர். நிலவில் முதல் முறையாக நீல் ஆம்ஸ்ட்ராங் காலடி பதித்தபோது, மனித குலத்தின் மிகப்பெரிய சாதனையை அவர்கள் வெளிப்படுத்தினர். அதை ஒருபோதும் மறக்க முடியாது’’ என்று கூறியுள்ளார்.

நீல் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ஆம்ஸ்ட்ராங்கை கவுரப்படுத்தும் விதத்தில் என்ன செய்யவேண்டும் என்று கேட்பவர்கள், அடுத்த முறை வானில் நிலவை பார்க்கும்போது அவரை நினைத்து கொள்ளுங்கள். அவரை கவுரவப்படுத்த அதுவே போதும்’’ என்று கூறியுள்ளனர்.

பூமியின் சுற்றுவட்டப்பாதைக்கு சென்ற முதல் விண்வெளி வீரரும், நீல் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய நண்பருமான ஜான் கிளென் கூறுகையில், ‘‘நீல் ஆம்ஸ்ட்ராங்கை நான் நினைக்கும்போது, அமெரிக்காவை மிகப்பெருமைப்படுத்தக்கூடிய விதத்தில் செயல்பட்ட மற்றொரு நபராகத்தான் அவரை நினைக்கிறேன்’’ என்றார்.

இவரும் நிலவுக்கு நீல் ஆம்ஸ்ட்ராங் பயணம் செய்தபோது உடன் சென்ற மற்றொரு விண்வெளி வீரர்.



No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!