Thursday, June 14, 2012

சாப்பிட்ட உடன் பல் துலக்கினால் ஆபத்து



தினமும் இரண்டு வேளை பல் துலக்குவது நல்லது என்று பல் மருத்துவர்கள் கூறுகின்றனர். அதற்காக உணவோ அல்லது குளிர்பானமோ சாப்பிட்ட உடனே பல் துலக்கிக் கொண்டிருந்தால் அது பல்லுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி விடும் என அமெரிக்காவில் உள்ள பொது பல் மருத்துவ பேரவையின் தலைவர் ஹோவர்ட் கேம்பிள் எச்சரித்துள்ளார்.

குறிப்பாக வாயு நிறைந்த மற்றும் அமிலத்தன்மை கொண்ட குளிர்பானங்களை குடித்தவுடன் பல் துலக்கினால் அந்த அமிலம் பல் ஈறுகளையும் அதன் அடியில் உள்ள படலத்தையும் எரித்து சேதப்படுத்தி விடுகிறதாம்.

அதாவது பல் துலக்குகிறோம் என்ற பெயரில் அந்த அமிலத்தை ஈறுகளுக்குள் ஆழமாக தள்ளும் வேலையைத்தான் நாம் செய்கிறோம் என அவர் கூறுகிறார்.

அதே சமயத்தில் குளிர்பானம் குடித்த ஒரு மணி நேரத்துக்கு பிறகு பல் துலக்கினால் எந்த பாதிப்பும் கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!