Monday, July 15, 2013

கூடங்குளம் அணுமின் நிலையம் நள்ளிரவு முதல் செயல்படத் தொடங்கியது

கூடங்குளம் அணுமின் நிலையம் நள்ளிரவு முதல் செயல்படத் தொடங்கியது 




கூடங்குளம் அணுமின் நிலையம் நேற்று நள்ளிரவு முதல் செயல்படத் தொடங்கியது. விரைவில் அணு மின்சாரம் உற்பத்தியாகவுள்ளது.

இதை இந்திய அணுசக்தி ஆணையத் தலைவர் ஆர். சின்ஹா அறிவித்துள்ளார். கூடங்குளத்தில் அணு உலையை செயல்படுத்துவதற்கான பணிகள் மும்முரமக நடைபெற்று வந்த்ன. இதை மும்பையில் இருந்து வந்த அணுசக்தி ஆணையத்தின் மூன்று நபர் குழு நேற்று ஆய்வு செய்தது.

இதையடுத்து அணு மின் நிலையம் செயல்பாட்டை நேற்று நள்ளிரவுவாக்கில் தொடங்கியது. அணு உலையில் முதலில் உஷ்ண வெளிப்பாடு நேற்று முதல் தொடங்கியுள்ளது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அணுசக்தி ஆணையத் தலைவர் சின்ஹா, கூடங்குளம் அணு உலை இனி முழுமையாக இயங்கும் என்று தெரிவித்தார்.

கூடங்குளம் அணு மின் நிலையம் செயல்படத் தொடங்கியதைத் தொடர்ந்து விஞ்ஞானிகள் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்துக் கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இங்கு ஒரு மாதத்தில் 400 மெகாவாட் உற்பத்தி இலக்கை எட்டும் என இந்திய அணுசக்தி கழகத் தலைவர் புரோகித் தெரிவித்தார்.

இந்தியா - ரஷ்யா கூட்டு முயற்சியில் ரூ.13 ஆயிரத்து 500 கோடி முதலீட்டில் தலா ஆயிரம் மெகாவாட் உற்பத்தி திறனுள்ள இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு அணு உலையில் அணு பிளவுக்கும், மின்சார உற்பத்தியை தொடங்கவும், கடந்த 11ஆம் தேதி அணுசக்தி ஒழுங்கு முறை வாரியம் அனுமதி அளித்தது.

இதையடுத்து, இந்திய அணுசக்தி துறை தலைவர் ஆர்.கே. சின்ஹா, இந்திய அணுசக்தி கழக தலைவர் கே.சி. புரோகித் ஆகியோர் நேற்று கூடங்குளம் வந்து, அங்கு நடந்து வரும் பணிகளை பார்வையிட்டனர்.

இங்கு உற்பத்தியாகும் மின்சாரம், மத்திய மின் தொகுப்புடன் இணைக்கப்படும். பின்னர் அதிலிருந்து மின்சாரம் மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும். தற்போது முதல் அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. கூடங்குளம் 2வது அணு உலையை பொறுத்தவரை, மாதிரி எரிபொருள் நிரப்பும் பணிகள் நடந்து வருகிறது. இன்னும் 8 மாதங்களில், இரண்டாவது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கும்.


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!