Monday, July 15, 2013

ஹனி, பாப்பா மெயில் அனுப்பியிருக்கா.. 'சுச்சூ' போய்ட்டாளாம்... 'நேப்பி' மாத்தி விடுவியாம்...!!

ஹனி, பாப்பா மெயில் அனுப்பியிருக்கா.. 'சுச்சூ' போய்ட்டாளாம்... 'நேப்பி' மாத்தி விடுவியாம்...!! 




மம்மியும், டாடியும் மட்டும்தான் மெயில் அனுப்பி கலக்க முடியுமா என்ன... இனி நீங்க பெத்த குட்டீஸும் மெயிலைத் தட்டி மிரட்டும் காலம் வரப் போகிறதாம். அது ஒரு கனாக் காலம்.. அப்படியெல்லாம் இனிமே சொல்லப்படாது.. இது மெயில் காலம்.. வெயில் காலத்தைக் கூட தாங்கிக் கொள்ள முடியும்..

ஆனால் இந்த மெயில்கள் படுத்தும் பாடு இருக்கே.. ரொம்பக் கஷ்டமப்பா. எதுக்கெடுத்தாலும் மெயில்.. சாப்ட்டியா, தூங்கிட்டியா.. இப்படி. இந்த நிலையில் மெயில் அனுப்புவோர் வரிசையில் விரைவில் புத்தம் புதிதாக பூமிக்கு வந்த குட்டி தேவதைகளும் இணையப் போகின்றனவாம். கேட்கவே மிரண்டு வருதுல்ல.. தொடர்ந்து படித்து அரண்டு போங்கள்...

அப்பா பிசி.. அம்மா பிசியோ பிசி... 

இப்பவெல்லாம் அப்பாக்களும், அம்மாக்களும் ஆளாளுக்கு வேலை வேலை என்று ஓடிக் கொண்டிருக்கும் நிலை. இந்த நிலையில் குழந்தைகளைக் கவனிக்க பக்கத்தில் இருக்கும் பெற்றோரை விரல் நகத்தை விட்டு எண்ணி விடலாம்.

தட்டி எழுப்ப வந்துருச்சு டெக்னிக்கல் பட்டன் 

நம்மளைக் கவனிக்காம இவங்க பாட்டுக்கு வேலையைப் பார்க்கிறாங்க பாரேன் என்று புலம்பும் குட்டீஸ்களும் அதிகரித்து வருகின்றனர். இவர்களுக்காகவே ஒரு நவீன சாதனத்தை உருவாக்கியுள்ளனர்.

பாப்பா உடலில் பேபிகுரோ 

இந்த புதிய சாதனத்திற்குப் பெயர் பேபிகுரோ.. இதை பிறந்த குழந்தையின் உடலுடன் இணைத்து விடுவார்களாம். பாப்பா, உச்சா போனாலோ அல்லது டபுள்ஸ் போய்ட்டாலோ உடனே இந்த சாதனத்திலிருந்து பாப்பாக்களின் அம்மாக்களுக்கும், அப்பாக்களுக்கும் ஒரு மெயில் போகும்...வேகமாக வந்து ஜட்டியை மாத்தி விட்டுப் போங்கய்யா என்று.

அது மட்டுமா.. 

இன்னும் கேளுங்க! உச்சா போவதை மட்டும் கவனிக்க இந்த சாதனம் கிடையாது. குழந்தையின் இதயத் துடிப்பு, உடல் தட்பவெப்பம், மூச்சு விடுவதில் உள்ள மாற்றங்கள் உள்ளிட்டவற்றையும் அது கண்காணித்து அதையும் பெற்றோருக்கு மெயில் மூலம் தெரிவிக்குமாம்.

கடுப்பா இருக்கான்னும் கூட சொல்லுமாம்...! 

அதை விட முக்கியமானது.. குழந்தை சந்தோஷமாக இருக்கிறதா.. அல்லது கடுப்பாக இருக்கிறதா என்பதையும் சொல்லுமாம் இந்த சாதனம். அப்படியே, பாப்பாவை அம்மா அடிச்சா உடனே போலீஸ்காருக்கு மெயில் போவது போலவும் செட் செஞ்சு விட்ருங்கப்பா... (எங்கோ ஒரு இடத்தில் அடிதடியில் 'சிக்கி' அவதிப்படும் ஒரு குழந்தையின் மைன்ட் வாய்ஸ்..)


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!