Thursday, July 18, 2013

1,21,653 சஹாரா ஊழியர்கள் தேசிய கீதம் பாடி கின்னஸ் சாதனை: பாகிஸ்தானின் சாதனை முறியடிப்பு

1,21,653 சஹாரா ஊழியர்கள் தேசிய கீதம் பாடி கின்னஸ் சாதனை: பாகிஸ்தானின் சாதனை முறியடிப்பு




1,21,653 இந்திய ஊழியர்கள் இணைந்து தேசியகீதம் பாடி கின்னஸ் சாதனை புரிந்துள்ளனர். இதற்கு முன்னர் 42,813 பேர் ஒன்று கூடி தேசீய கீதம் பாடப்பட்ட பாகிஸ்தான் சாதனை இதனால் முறியடிக்கப்பட்டுள்ளது.

சகாரா நிறுவனத்தின் தலைவர் சுப்ரதோ ராய் தலைமையில், உத்திரப்பிரதேசத்தின் தலைநகரான லக்னோவில் முன்தினம் சகாரா நிறுவனத்தாரின் சாதனை முயற்சியாக 1,21,653 ஊழியர்கள் இணைந்து இந்தியாவின் தேசியகீதத்தை ஒருங்கிணைந்து பாடினார்கள்.

நமது தேசிய கீதத்தை உருவாக்கிய ரபிந்தரநாத் தாகூரின், 152ஆவது பிறந்த நாளை கொண்டாடும் நோக்கில் நடைபெற்றது இந்த முயற்சி. இதுவரை 42,813 பாகிஸ்தானியர்கள் சேர்ந்து தங்கள் நாட்டின் தேசியகீதத்தை இசைத்ததுதான் கின்னஸ் சாதனையாக இருந்து வந்தது.

தற்போது நடந்த இந்த நிகழ்ச்சியை கின்னஸ் சாதனைக் குழு மேற்பார்வையிட்டு கின்னஸில் இடம்பெற சம்மதம் தெரிவித்துள்ளது. எனவே, இனி இந்த நிகழ்ச்சியே சாதனை நிகழ்ச்சியாக அறிவிக்கப் பெறும்.

இந்த சாதனை குறித்து சகாரா நிறுவனத் தலைவர் சுப்ரதோ ராயிடம் கேட்டபோது, 'தேசிய கீதத்தை ஒருங்கிணைந்து பாடுவதில் பாகிஸ்தான் நாடு முன்னணியில் இருக்கிறது என்பதனை அறிய வந்தபோது, நமது நாட்டினர் இந்த சாதனை முயற்சியில் முதலிடத்தில் இருக்கவேண்டும் என்று எண்ணி அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டோம்.

மேலும், இதற்காக ஒரு குழு அர்ப்பணிப்புடன் பணியாற்றியபோது எங்களின் சாதனை நிகழ்ச்சி எந்தத் தடையுமில்லாமல் நிறைவேற்றப்பட்டது' என அவர் கூறினார்.



No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!