Thursday, August 15, 2013

ஆரோக்கியமான மற்றும் கவர்ச்சியான மார்பகங்களை பெறுவதற்கான சில டிப்ஸ்...

ஆரோக்கியமான மற்றும் கவர்ச்சியான மார்பகங்களை பெறுவதற்கான சில டிப்ஸ்... 


பெண்களின் கவர்ச்சியில் முக்கிய அங்கமாக விளங்குவது அவர்களின் மார்பகங்கள். அதை எடுப்பாக வைத்திருக்க பல பெண்கள் முற்படுவது வாடிக்கையே. ஆனால் அப்படிப்பட்ட இடத்தில் தான் ஒரு முக்கிய பிரச்சனையையும் சந்திக்கிறார்கள். அது தான் மார்பக புற்றுநோய்.

சிலவகை உணவுகளை உண்பதால் மார்பக புற்றுநோய் வரும் ஆபத்து குறையும் என்று பல ஆய்வுகள் கூறுகிறது. அப்படி உணவில் சேர்க்க வேண்டிய பொருட்களில் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற பழங்களும் காய்கறிகளும் அடங்கும். பட்டர்நட் பழப்பானம் இவ்வகை உணவிற்கு ஒரு உதாரணமாகும். இதில் மார்பக புற்றுநோய் ஆபத்தை குறைக்க உதவும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டான பீட்டா-கரோடீன் உள்ளது.

இப்போது ஆரோக்கியமான மார்பகங்களை பெறுவதற்கு மேற்கொள்ள வேண்டிய சில முக்கிய குறிப்புகளை படித்து தெரிந்து கொண்டு, அதனைப் பின்பற்றி, ஆரோக்கியமான மற்றும் அழகான மார்பகங்களைப் பெறுங்கள்.

சரியான உணவுகள் 

வால்நட், ஆளி விதை, க்ரான்பெர்ரி மற்றும் எண்ணெய் சத்துள்ள மீன்கள், வெண்ணைப்பழம், முட்டைகளில் உள்ள ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் ஆகியவைகளும் மார்பக புற்றுநோய் ஆபத்தை குறைக்க உதவும். மெக்னீசியம் அதிகமாக உள்ள உணவை உண்பதால் மார்புகள் வீங்குவதையும், நொய்வு ஏற்படுவதையும் தடுக்கும்.

பொருத்தமான பிரா 

70 சதவீத பெண்கள் பயன்படுத்தும் பிரா தவறான அளவாக இருக்கிறது என்று கூறப்படுகிறது. இது மோசமான தோற்ற நிலை, சரும எரிச்சல் மற்றும் சுவாச கோளாறுகள் என பல உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேலும் இது மார்பக தசை நார்களை பாதிக்கும். இதனால் மார்பகத்தில் வலியும் தொய்தலும் ஏற்படும்.

பருவ காலத்தினால் ஏற்படும் மாற்றம் 

எடை மாறுதல், கருவுற்றல் அல்லது மாதவிடாய் நிறுத்தம் என பல காரணங்களால் மார்பகத்தின் அளவு நிலையாக இல்லாமல் ஒவ்வொரு பருவத்திலும் மாறிக்கொண்டே இருக்கும். அதனால் மார்பக அளவை ஊகிப்பதை விட, சரியான இடைவேளையில் அதன் அளவை அளந்து கொண்டால், அதற்கேற்ப உங்கள் மார்பகங்களை பராமரிக்கலாம்.

உடற்பயிற்சி 

உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தில் ஈடுபடுதல் அவசியம். வாரத்திற்கு நான்கு மணி நேரம் அல்லது அதற்கு மேலாக உடற்பயிற்சியில் ஈடுபட்டால் ஈஸ்ட்ரோஜன் அளவு குறையும் என்று ஆய்வுகள் கூறுகிறது. அதன் விளைவாக மார்பகபுற்று நோயின் இடர்பாடு குறையும். இந்த வியாதி உள்ளவர்கள் ஒவ்வொரு வாரமும் சில மணி நேரம் உடற்பயிற்சியில் ஈடுபட்டால், இந்த நோயை எதிர்த்து போராடலாம் என்றும் சில ஆய்வுகள் கூறுகிறது. இதில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். உடற்பயிற்சி என்பது உடல்நலத்திற்காக மட்டுமல்ல, மார்பகங்கள் தொய்வு ஏற்படாமலும் காக்கும். மேலும் மார்பகங்கள் எடுப்பாகவும் காட்சி அளிக்கும்.

மார்பகத்திற்கான பயிற்சிகள் 

நெஞ்சுக்கான உடற்பயிற்சிகள் ஆண்களுக்காக மட்டும் தான் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது தவறு. மார்பக தசைகள் வலு பெற புஷ்-அப் மற்றும் பெஞ்ச் பிரஸ் போன்ற உடற்பயிற்சியில் ஈடுபடலாம். அப்படி செய்வதால் தசைகள் திடமாகி, மார்பகங்கள் தொய்வு நீங்கி, அழகிய அமைப்புடன் மேலோங்கி நிற்கும்.

மார்பக க்ரீம்கள் 

இயற்கையான முறையில் மார்பகங்கள் மேலோங்கி நிற்க அதற்காக விற்கப்படும் க்ரீம்களை அதன் மீது தடவலாம். அதுவும் நல்ல பலனை தரும். மார்பக பிளவு தெரியும் படி ஆடை அணியும் போது, மார்புகள் தொய்வு இல்லாமல் மேலோங்கி நின்றால் பார்க்க எடுப்பாக தெரியும். இப்படி க்ரீம் பயன்படுத்தினால், அது மார்பக அளவையும் அமைப்பையும் எந்த விதத்திலும் பாதிக்காது. மேலும் இவ்வகை க்ரீமை மார்பகங்களில் சீரான முறையில் தடவி மசாஜ் செய்தால், அது சரும மீள்தன்மையை மேம்படுத்தும். மேலும் சுருக்கம் மற்றும் தொய்வு ஏற்படாமல், மார்பக அமைப்பை எடுப்பாக மாற்றும்.

சிறப்பான மார்பக பிளவு இருப்பதை போல பிம்பத்தை உருவாக்கலாம் 

கழுத்திற்கு கீழ் மார்பகம் தெரியும் படி ஆடை அணிய திட்டமிடுகிறீர்களா? அப்படி அணியும் ஆடையினால் மார்பக பிளவை அதிகமாக காட்ட வேண்டும் என்று நினைக்கிறீர்களா? கொஞ்சம் மேக்-கப் செய்தால் போதும், பெரிய மார்பகங்கள் இருப்பதை போன்ற பிம்பத்தை ஏற்படுத்தலாம்.

அதற்கு முதலில் உங்களுக்கு பிடித்த கவர்ச்சியான பிராவை அணிந்து கொண்டு, பின் மார்பகங்களுக்கு மத்தியில் மேட் ப்ரான்சர் (matte bronzer) என்ற பவுடரை லேசாக பூசிக்கொள்ளுங்கள். இது பார்ப்பதற்கு ஒரு நிழல் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும். பின் மார்பகங்களுக்கு மேலும், கழுத்துக்கு கீழும் மினுமினுப்பான பவுடரை பூசிக் கொள்ளுங்கள். இப்போது பாருங்கள் உங்கள் தோற்றத்தை பார்த்து நீங்களே அசந்தே போய் விடுவீர்கள்!

மார்பகங்களை சோதனை செய்யுங்கள் 

பிரேக் த்ரூ மார்பக புற்றுநோய் நடத்திய ஆய்வின் படி, 35 சதவீத பெண்கள் மட்டும் தான் சீரான முறையில் மார்பகங்களை புற்றுநோய்க்காக சோதனை செய்து கொள்கிறார்கள் என்று சொல்கிறது. பொதுவாக பெண்கள் இறப்பை சந்திப்பதற்கு பெரிய காரணமாக விளங்குகிறது மார்பக புற்றுநோய். அத்தகைய நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து சிகிச்சை எடுத்துக் கொண்டால், உயிர் பிழைப்பது சாத்தியமாகும்.

ஆகவே பெண்கள் ஒவ்வொரு மாதமும் தன் மார்பகங்களை சோதனை செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். மார்பகங்களின் அளவு, அமைப்பு போன்றவைகளில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் சரி, சொறி, கட்டி போன்ற பாதிப்புகளை கண்டாலும் சரி, உடனே சோதனை செய்து கொள்ள வேண்டும். மார்பக மாற்றங்களை எப்படி கண்டு பிடிப்பதென்று தெரியவில்லை என்றால், இணையதளங்களில் சென்று படித்து பாருங்கள் அல்லது ஒரு மருத்துவரை அணுகி டிப்ஸ்களை பெறுங்கள்.

புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடுங்கள் 

புகைப்பிடிக்கும் பழக்கம் பல ஆபத்தான நோயை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது. அதற்கு மார்பக புற்றுநோய் ஒன்றும் விதி விலக்கல்ல. கலிபோர்னியா ஹெல்த் சர்வீசஸ் துறையை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வின் படி, மார்பக புற்றுநோய் புகைப்பிடிக்காத பெண்களை விட, புகைப்பிடிக்கும் பெண்களை தான் 30 சதவீதம் அதிகமாக தாக்குகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் தொடர்ச்சியாக புகைப்பிடிப்பதால், இதன் விளைவு கொஞ்சம் கொஞ்சமாக உடலில் தேங்கும். இதனால் உடல்நல இடர்பாடு காலப்போக்கில் அதிகரிக்கும். அதனால் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டால், பல வியாதிகளில் இருந்து தப்பிக்கலாம்.

ஸ்போர்ட்ஸ் பிரா அணியுங்கள் 

உடற்பயிற்சியில் ஈடுபடும் போது, மார்பகங்கள் உடலின் அசைவுக்கேற்ப நகர முற்படும். போதுமான ஆதரவு இல்லாமல் உடற்பயிற்சியில் ஈடுபட்டால் (முக்கியமாக பெரிய மார்பகங்களை கொண்ட பெண்கள்), அது வலியையும், உபாதையையும் ஏற்படுத்தும். மேலும் அது தசை நாரை பாதிப்படைய செய்து, மார்பகங்களுக்கு தொய்வு ஏற்படுத்தும். எனவே உடற்பயிற்சியினால் மார்பகங்கள் பாதிப்படையாமல் இருக்க, முதலில் மார்பின் அளவுக்கேற்ப ஒரு ஸ்போர்ட்ஸ் பிராவை வாங்கி, உடற்பயிற்சியில் ஈடுபடும் போது அணியுங்கள். இது தினமும் அணியும் பிராவைப் போல் அல்லாமல், கொஞ்சம் திடமாக இருக்கும். அதனால் மார்பக அசைவுகள் குறையும்.

தோரணையை மேம்படுத்துங்கள் 

மார்பகங்கள் உடனே மேலோங்கி எடுப்பாக தெரிய வேண்டுமானால், தோரணையை மேம்படுத்துங்கள். அதிலும் தோள்பட்டைகள் கூன் விழுந்திருந்தால், மார்பக தசைகள் மீள்விசையை இழந்து காலப்போக்கில் தொய்வு அடையும். மேலும் பின் பக்கத்தை வளைக்காமல் நேராக நடந்து சென்றாலும் கூட, மார்பகங்கள் எடுப்பாகவும் அழகாகவும் தெரியும். மேலும் நாள் முழுவதும் எப்படி நிற்க வேண்டும், நடக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். குறிப்பாக யோகா, பிளேட்ஸ் அல்லது டை சீ போன்ற பயிற்சியில் ஈடுபட்டு, தோரணையை மேம்படுத்தி மார்பகங்களை எடுப்பாக காட்டுங்கள்.