Thursday, August 15, 2013

பொருளாதாரம் பற்றிய சீனாவின் புள்ளி விவரங்கள் எல்லாமே பொய் பொய்

பொருளாதாரம் பற்றிய சீனாவின் புள்ளி விவரங்கள் எல்லாமே பொய் பொய்


சீனா தெரிவித்து வரும் மிரட்டக் கூடிய புள்ளி விவரங்கள் அனைத்துமே பொய்யானவை என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சீனா தெரிவித்து வருவது போல் அதன் உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி விகிதம் கேள்விக்குரியது என்கின்றனர் வல்லுநர்கள்..

2007 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க தூதரக ஆவணங்களில், சீனாவின் புள்ளி விவரங்கள் 'மனிதர்களால் உருவாக்கப்பட்ட' ஆவணங்கள் என்று அப்போதைய தூதரிடம் லியானிங் மாகாண உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக கூறப்பட்டிருந்தது.

அதே போல் 2010ஆம் ஆண்டு விக்கிலீக்ஸ் தகவல்களின்படியும் மாகாணங்களின் மின்சார நுகர்வு, சரக்கு ரயில் வருவாய், வழங்கப்பட்ட கடன் அளவு ஆகியவற்றை மட்டுமே அந்நாட்டு அதிபர் லீ கவனத்தில் கொள்கிறார் என்றும் கூறப்பட்டிருந்தது. இதர புள்ளி விவரங்கள் அனைத்தும் ஜஸ்ட் ஆவணங்களில்தான் என்கிற வகையில் லீ செயல்படுகிறார் என்பது விக்கிலீக்ஸ் தகவல்.

2010ஆம் ஆண்டு ஜப்பானைவிட சீனா பொருளாதாரத்தில் முன்னேறியிருந்தது. பிரான்ஸைவிட சீனா அதிவேகமாக மாத, ஆண்டு புள்ளி விவரங்களை கணக்கிவிட்டு விடுகிறது என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள். இதனால்தான் சீனாவின் பொருளாதார புள்ளி விவரங்கள் பற்றிய கேள்வியே எழுகிறது என்கின்றனர்.

ஆக சீனா தெரிவித்த புள்ளி விவரங்கள் எல்லாமே பொய்யா?


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!