Wednesday, July 3, 2013

ஆபிஸ்ல அடிக்கடி எழுந்து நடங்க நீரிழிவு வராது…. ஆய்வில் தகவல்

ஆபிஸ்ல அடிக்கடி எழுந்து நடங்க நீரிழிவு வராது…. ஆய்வில் தகவல்


அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் அரைமணி நேரத்திற்கு ஒருமுறை எழுந்து இரண்டு நிமிடங்கள் நடக்க வேண்டும். இதன்மூலம் நீரிழிவை தடுக்க முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அலுவலகத்தில் அமர்ந்து கொண்டே அதிக நேரம் வேலை பார்ப்பதால் உடல் பருமன் ஏற்படுகிறது. இதனால் நீரிழிவு, உயர்ரத்த அழுத்தம் உள்ளிட்ட பலவித நோய்களும், இருதயம் தொடர்பான நோய்களும் தாக்குகின்றன.

டைப் 2 நீரிழிவுக்கு ஆளானவர்களின் பெரும்பாலோனோர் அலுவலகத்தில் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்பவர்கள்தான் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட நியூசிலாந்தை சேர்ந்த ஒடாகோ பல்கலைக்கழக்கத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் நீரிழிவினைத் தடுக்க சில ஆலோசனைகளை தெரிவித்துள்ளனர்.

உடற்பயிற்சி, நடை பயிற்சி செய்ய நேரம் இல்லாதவர்கள் அலுவலகத்தில் அரைமணி நேரத்திற்கு ஒருமுறை இரண்டு நிமிடங்கள் நடக்க வேண்டும். இதன் மூலம், கொழுப்பு, சர்க்கரை அளவு கட்டுப்பாட்டிற்கு வரும் என்று கூறியுள்ளனர். லோ பிளட் சுகர் கட்டுப்படுவததோடு இன்சுலின் அளவு சீராகும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

டைப் 2 நீரிழிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதயநோய், பக்கவாதம் போன்றவை தாக்கும் வாய்ப்புகள் அதிகம். எனவே இரண்டு நிமிடங்கள் நடப்பதன் மூலம் நீரிழிவை கட்டுப்படுத்துவதோடு இருதய நோய் ஏற்படாமலும் தடுக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள். இந்த ஆய்வு முடிவு அமெரிக்க ஜர்னல் கிளினிக்கல் நியூட்ரீசன் என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!