Monday, April 1, 2013

எகிப்து அருகே கடலடி இன்டர்நெட் கேபிள் துண்டிப்பு... இந்தியாவில் தொடரும் பாதிப்பு

எகிப்து அருகே கடலடி இன்டர்நெட் கேபிள் துண்டிப்பு... இந்தியாவில் தொடரும் பாதிப்பு



எகிப்துக்கு அருகே கடலடி இன்டர்நெட் கேபிள் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் இந்தியா உள்ளடக்கிய தெற்காசியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளில் இன்டர்நெட் இணைப்புகளின் வேகம் மகா மந்தமாக உள்ளன. இதனால் பயனீட்டாளர்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர்.

கடந்த சில நாட்களாகவே இன்டர்நெட்டுக்கு நேரம் சரியில்லை. ஆலந்தைச் சேர்ந்த ஒரு வெப்ஹோஸ்டிங் நிறுவனம் ஸ்பேமை பரப்பி முதலில் இன்டர்நெட்டின் வேகத்தை குறைத்து கஷ்டத்தைக் கொடுத்தது. அதிலிருந்தே இன்னும் மக்கள் மீளாத நிலையில் தற்போது கடலடி கேபிள் துண்டிப்புப் பிரச்சினையில் இன்டர்நெட் சிக்கியுள்ளது. இதனால் இன்டர்நெட்டின் வேகம் மந்தமாகி மக்களை வதைக்க ஆரம்பித்துள்ளது.

எகிப்துக்கு அருகே கடலுக்கடியில் உள்ள இன்டர்நெட் கேபிள்கள் சேதமடைந்துள்ளதால், ஆசியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளில் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எகிப்தின் அலெக்சாண்டிரியாவுக்கு அருகே கேபிள் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கேபிளை டாடா கம்யூனிகேஷன்ஸின், விஎஸ்என்எல் பயன்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தம் 3 வகையான கேபிள் இணைப்புகளில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் இந்தியா முழுவதும் பல லட்சம் பேர் இணைப்பின் வேகம் குறைந்து கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

முதலாவது இணைப்பு, இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் வழியே தென்கிழக்கு ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் கடல்வழி வலையமைப்பாகும்.

இரண்டாவது இணைப்பு ஐரோப்பாவையும், இந்தியாவையும் இணைக்கின்றது. 15,000 கி.மீ. தூரம் பரந்துள்ள இதில்தான், பாரதி ஏர்டெல் நிறுவனமும், பிஎஸ்என்எல் நிறுவனமும் தங்களது வலைத்தளத் தொடர்புகளைக் கொண்டுள்ளன.

மூன்றாவது இணைப்பு, மத்தியக் கிழக்கு நாடுகள் மூலம் இந்தியாவையும், ஐரோப்பாவையும் இணைக்கின்றது. இதில் ஏர்டெல் நிறுவனமும், டாட்டா நிறுவனமும் செயல்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!