Monday, December 2, 2013

ஏர்பஸ் மிலிடரி A400M ராணுவ விமானத்தின் கன்னிப் பயணமும், கடைசிப் பயணமும்!

ஏர்பஸ் மிலிடரி A400M ராணுவ விமானத்தின் கன்னிப் பயணமும், கடைசிப் பயணமும்!



 
ஐரோப்பிய விமான தயாரிப்பு நிறுவனம் ஏர்பஸ்ஸின் ராணுவ பிரிவான ‘ஏர்பஸ்-மிலிடரி’ (‘Airbus Military’), தமது முக்கிய விமானம் ஒன்று ஓய்வு பெறுவதை அறிவித்துள்ளது. ஏர்பஸ் மிலிடரி A400M ராணுவ விமானம் 1-வது தடவை கன்னிப் பயணமாக வானில் பறந்த தேதியில் இருந்து சுமார் 4 வருடங்களின் பின், தனது இறுதி பயணத்தை முடித்து தரையிறங்கியது.

கன்னிப் பயணத்தின்போது அந்த விமானத்தை இயக்கிய அதே விமானிகள் மற்றும் பிளைட் எஞ்சினியர்கள்தான், இறுதி பிளைட்டையும் இயக்கினர் 



விமானம் அறிமுகப்படுத்தப்பட்டு 4 ஆண்டுகளில் ஓய்வு பெறுகிறது என நாம் எழுதியதால், விமானத்தில் ஆயுள் காலமே அவ்வளவுதானா என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். இதை அப்படி பார்க்க கூடாது.






எந்தவொரு புதிய மாடல் விமானத்தை டிசைன் செய்யும்போதும், தயாரிக்கப்படும் 1-வது விமானம் விற்பனைக்காக தயாரிக்கப்படுவதில்லை. தயாரிக்கப்படும் 1-வது விமானத்தை Development aircraft என்பார்கள். ஏர்பஸ் மிலிடரி A400M ராணுவ விமானத்தின் 1-வது விமானம், MSN1, இந்த விமானத்தை அடுத்த அடுத்த கட்ட தயாரிப்புகளில் எப்படி மேம்படுத்தலாம் என்பதற்கான பரிசோதனைகளை செய்ய தயாரிக்கப்பட்டது.

புதிய மாடல் விமானம் ஒன்றை தயாரிக்க தொடங்கியபின், சிறிது சிறிதாக அதன் இயங்குதிறனை டெவலப் செய்வது, 1-வது விமானத்தை தொடர்ந்து பறக்க வைத்து பார்ப்பதன் மூலம்தான். புதிதாக மாற்றம் எதையாவது செய்து, 1-வது விமானத்தில் பொருத்தி பறந்து பார்த்தே, அது சரியாக உள்ளதா என்று செக்கிங் செய்வார்கள்.

அப்படி தயாரிக்கப்பட்ட 1-வது விமானம்தான், தற்போது ஓய்வு பெற்றுள்ளது. இதை, கண்காட்சிச்சாலை ஒன்றில் காட்சிக்கு வைப்பது என ஏர்பஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.



ஒரு விமானத்தின் புதிய மாடல் டிசைன் பண்ணப்படுவது, தயாரிக்கப்படுவது, அறிமுகப்படுத்தப் படுவது, அப்கிரேட் செய்வது, கஸ்டமர்களை வசப்படுத்துவது என ஒவ்வொரு ஸ்டெப்புமே, மிகவும் சுவாரசியமானவை. இதற்காகவே மில்லியன் கணக்கில் செலவிடுவார்கள். சுவாரசியமான இந்த ஸ்டெப்ஸ்களை, நாம் கொடுத்துள்ள போட்டோக்களில் பார்க்க போகிறீர்கள்.

ஏர்பஸ் மிலிடரி A400M ராணுவ விமானம், புதிய தலைமுறை விமானமாக பல நாடுகளின் விமானப்படைகளால் கருதப்படுகிறது. இந்த ரக விமானத்தின் முதலாவது கஸ்டமர், பிரான்ஸ் நாட்டு விமானப்படை.

ராணுவத்துக்காக தயாரிக்கப்படுகிறது என்பதால், இது ஒரு போர் விமானமல்ல. ராணுவ போக்குவரத்து விமானம். துருப்புக்களையும், ராணுவ தளவாடங்களையும் கொண்டுசெல்ல பயன்படுத்தப்படும் விமானம்.


ஏர்பஸ் மிலிடரி A400M ராணுவ விமானத்தின் மற்றொரு சிறப்பம்சம், இதை டேங்கள் விமானமாகவும் மாற்ற முடியும். அதாவது, வானில் வைத்து மற்றைய விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் விமானமாக இதை பயன்படுத்த முடியும். பொதுவாக அப்படியான பணிக்கு பயன்படுத்தப்படும் விமானம், வேகமாகவும், அதே நேரத்தில் மெதுவாகவும் பறக்கக்கூடிய விமானமாகவும் இருக்க வேண்டும்.

அத்துடன், அளவில் பெரிய அந்த விமானம், செங்குத்தாக மேலெழ கூடிய திறன் கொண்டதாகவும் இருக்க வேண்டும் (14-வது போட்டோவை பார்க்கவும். இந்த சைஸ் விமானங்கள் இப்படி பறப்பதை லேசில் பார்க்க முடியாது).

நம்ம பவர் ஸ்டார் படம் வெளியானாலே முதல்நாள் ஹீரோ கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வதை லோக்கல் தியேட்டர் வாசல்களில் பார்த்திருப்பீர்கள். பவர் ஸ்டாருக்கே பால் அபிஷேகம் செய்வதை பார்த்த கண்களால், பிளேனுக்கு அபிஷேகம் செய்வதை பார்த்திருக்கிறீர்களா?

அதுவும் பால் அல்ல, ஷம்பெயின் அபிஷேகம்!






No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!