Wednesday, July 24, 2013

ஏழுமலையான் பக்தர்களால் பயணிகள் வருகையில் முதலிடம் பிடித்தது ஆந்திரா

ஏழுமலையான் பக்தர்களால் பயணிகள் வருகையில் முதலிடம் பிடித்தது ஆந்திரா


திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தினமும் ஏராளமான பக்தர்கள் வருவதால் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகையில் ஆந்திரா மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது.ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் திருமலையில் 10 நூற்றாண்டைச் சேர்ந்த பிரசித்தி பெற்ற ஏழுமலையான் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள தாஜ் மகால், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அஜந்தா&எல்லோரா ஆகிய சுற்றுலா தளங்களை விட இங்கு அதிக உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கடந்த ஆண்டில் மட்டும் ஆந்திராவுக்கு 20.68 கோடி உள்நாட்டு சுற்றுலா பயணிகள் சென்றுள்ளனர்.

தமிழ்நாடு 18.41 கோடி சுற்றுலா பயணிகளை ஈர்த்து 2வது இடத்தையும், உத்தரப்பிரதேசம் 16.84 சுற்றுலா பயணிகளை ஈர்த்து 3வது இட த்தையும் பிடித்துள்ளன.2010ம் ஆண்டில் 74.80 கோடியாக இருந்த மொத்த உள்நாட்டு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை, 2011ல் 86.50 கோடியாக அதிகரித் தது. இது 2012ல் 19.87 சதவீதம் உயர்ந்து 103.60 கோடியாக உயர்ந்தது. முதல் 10 இடங்களில் கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரகாண்ட், குஜராத், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் உள்ளன. இந்த 10 மாநிலங்களும் மொத்தம் 84.5 சதவீத உள்நாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்த்துள்ளன.அதேபோல வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியாவுக்கு வருவதும் 6.33 சதவீதம் அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்துக்கு 2012ம் ஆண்டில் அதிகபட்சமாக 51 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். தமிழ்நாடு (36 லட்சம்), டெல்லி (23 லட்சம்) ஆகியவை முறையே 2 மற்றும் 3ம் இடங்களை வகிக்கின்றன.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!