Thursday, October 3, 2013

2050ல் உலக மக்கள்தொகையில் இந்தியா 'நம்பர் ஒன்' ஆகும்.. 2வது இடத்துக்குத் தள்ளப்படும் சீனா...!

2050ல் உலக மக்கள்தொகையில் இந்தியா 'நம்பர் ஒன்' ஆகும்.. 2வது இடத்துக்குத் தள்ளப்படும் சீனா...! 




வரும் 2050ம் ஆண்டுக்குள் 160 கோடி மக்கள் தொகையுடன் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா மக்கள் தொகையில் முதலிடத்தை பிடிக்கும் என சமீபத்தில் பிரான்ஸ் நாட்டின் ஆய்வறிக்கை ஒன்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. மக்கள் தொகையில் நாம் அசுர வேகத்தில் முன்னேறி வருகிறோம் என்பது நாமே அறிந்த விஷயம் தான் என்ற போதும், உலக மக்கள் தொகையில் தற்போது சீனா தான் முதலிடத்தில் இருந்து வருகிறது. 

ஆனால், இந்த நிலை மாறி 2050ல் இந்தியா தான் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக விளங்கும் என தெரிவிக்கிறது இந்த ஆய்வு.

மக்கள்தொகைப்பெருக்கம்.... 

பிரெஞ்ச் இன்ஸ்டிடியூட் ஆப் டொமோகிராபிக் ஸ்டெடீஸ் மூலம் இந்த ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. இதில், இந்த நூற்றாண்டின் மத்தியில் உலக நாடுகளின் மக்கள்தொகைப் பெருக்கம் என்ற நோக்கத்தில் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.

970 கோடி மக்கள்தொகை.... 

அந்த ஆய்வின் படி, உலகின் ஒட்டுமொத்த மக்கள் தொகை சுமார் 970 கோடியாக உயரும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, 710 கோடி உலக மக்கள் தொகை என ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா முதலிடம்..? 

அந்தவகையில், தற்போது முதலிடத்தில் உள்ள சீனாவைப் பின்னுக்கு தள்ளி இந்தியாவின் மக்கள்தொகை 160 கோடியாக மாறி முதலிடத்தைப் பிடிக்கும் என எச்சரிக்கை விடப் பட்டுள்ளது.

இரண்டாமிடத்தில் சீனா.... 

அதே நேரத்தில், இரண்டாம் இடத்தில் உள்ள சீனாவின் மக்கள் தொகை சுமார் 130 கோடியாக இருக்கும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.


7 மடக்கு அதிகரிப்பு.... 

கடந்த 200 ஆண்டுகளில் உலக மக்கள்தொகை 7 மடங்கு அதிகரித்துள்ளது எனவும், இது 10 முதல் 11 பில்லியனாக இந்த நூற்றாண்டின் முடிவில் மாற வாய்ப்புள்ள்தாகவும் ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது..

மூன்றில் ஒரு பங்கினர்.... 

ஒட்டுமொத்த உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியா மற்றும் சீனாவில் பிறந்தவர்கள் என்பது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

முன்னேற்றத்தில் பாக்...... 

அதேபோல், தற்போது உலக மக்கள்தொகையில் ஆறாவது இடத்தில் உள்ள பாகிஸ்தான் நான்காவது இடத்திற்கு முன்னேறவும் வாய்ப்புள்ளதாக ஆய்வு விவரங்கள் தெரிவிக்கின்றன.

Join with us on Facebook  >>>

              அறிவியல்


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!