Thursday, July 19, 2012


ஒன்றரை அடி உயர அதிசயம் உலகின் தம்மாத்தூண்டு சிறுமி




சீனாவின் ஹூவாய்ஹூவா பகுதியை சேர்ந்த 3 வயது சிறுமி லியாங் சியாவோசியாவோ. வயதுக்குரிய வளர்ச்சி இல்லாததால், 54 செ.மீ. உயரமே இருக்கிறாள். உலகின் மிக சிறிய சிறுமி லியாங்தான். பிறக்கும் போது 1.05 கிலோ எடை, 33 செ.மீ. உயரம் இருந்தாள். 3 ஆண்டுகளில் 22 செ.மீ. உயரமே வளர்ந்திருக்கிறாள். எடை தற்போது 2.5 கிலோ இருக்கிறாள். எடை குறைவாக இருப்பதால் சாங்சா நகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாள். அங்கிருக்கும் மற்ற குழந்தைகளோடு தட்டு தடுமாறி விளையாடுகிறாள். ‘மரபியல் குறைபாடு காரணமாக அவளது உடல் வளர்ச்சி பாதிக்கப்பட்டிருக்கிறது. அவள் இனி வளர்வதற்கு வாய்ப்பு இல்லை.


வயதானாலும் இவ்வளவு உயரம்தான் இருப்பாள்’ என்கின்றனர் டாக்டர்கள். அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில் உள்ள சார்லோட் நகரில் உள்ள மருத்துவமனையில் 6 மாதங்களுக்கு முன்பு நிக்கி , சாம் மூர் தம்பதிக்கு குறைப்பிரசவத்தில் குழந்தை பிறந்தது. ரொம்ப ரொம்ப குறைப் பிரசவம். 25 வாரங்களே ஆன குழந்தை பிறந்தது. ஒரு சோடா பாட்டில் அளவே இருந்த குழந்தையை காப்பாற்ற டாக்டர்கள் மிகவும் போராடினர். 6 மாதங்கள் அவசர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டதன் பலனாக குழந்தை உயிர் பிழைத்துள்ளது. கென்னா க்ளெயிர் மூர் என பெயரிடப்பட்ட அந்த குழந்தை நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனது. கென்னா, உலகில் உயிர் வாழும் சிறிய குழந்தைகளில் ஒருத்தி என்ற பெருமையை பெற்றுள்ளாள்.


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!