Wednesday, July 25, 2012


முதல் முறையாக விண்வெளிக்கு பயணம் மேற்கொண்ட அமெரிக்க பெண் மரணம்





அமெரிக்காவிலிருந்து முதன்முறையாக விண்வெளிக்கு பயணம் மேற்கொண்ட சேலி ரைட் (வயது 61), நேற்று கணையப் புற்றுநோயால் மரணமடைந்தார்.

டென்னிஸ் விளையாட்டு வீராங்கனையாக இருந்த சேலி, நான்கு பல்கலைக்கழகப் பட்டங்களைப் பெற்றுள்ளார். இயற்பியலில் முனைவர் பட்டமும் பெற்றார்.

இவரது மரணத்தால் மனம் வருந்திய ஜனாதிபதி ஒபாமா இவரை தேசிய வீராங்கனை என்றும் மற்றவர்களுக்கு ஆற்றல்மிகு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர் எனவும் பாராட்டியுள்ளார்.

சேலி ரைட், கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்செல்ஸில் பிறந்தார். ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானம் பயின்றார்.




விஞ்ஞானிகளும் பொறியியல் வல்லுநர்களும் “நாசா”வுக்குத் தேவை என்ற விளம்பரத்தைப் பார்த்து விண்ணப்பித்தார். 8000 பேர் விண்ணப்பத்தில் 35 பேர் மட்டுமே தெரிவாயினர். அவர்களில் ஒருவரான சேலி 1978ம் ஆண்டில் நாசாவில் சேர்ந்தார்.

அங்கு சிறப்பாக பணியாற்றி, கடந்த 1983ம் ஆண்டில் சேலஞ்சர் என்ற விண்கலத்தில் விண்வெளிக்கு பறந்தார்.

இவரது மரணம் குறித்து நாசா நிர்வாகி சார்லஸ் போல்டென், சேலியை நாம் இழந்துவிட்டோம், ஆனால் அவரது நட்சத்திரம் எப்போதும் வானில் ஒளிவீசிக் கொண்டேயிருக்கும் என்றார்.

நாசாவை விட்டு விலகிய பின்பு கலிபோர்னியா சேன் டியாகோ ஸ்டான்போர்டு பல்கலைக்கழகங்களில் அறிவியல் பேராசிரியராக பணியாற்றினார்.

கடந்த 2001ம் ஆண்டில் சேலி ரைட் சைன்ஸ் என்ற அறக்கட்டளையை நிறுவி சிறுவர்களுக்கான அறக்கட்டளை வெளியிட்டார். அறிவியல் நிகழ்ச்சிகளை நடத்தினார். சிறுவர்களுக்கு அறிவியல் பற்றிய அறிவை ஊட்டும் வகையில் இவர் ஐந்து நூல்களை எழுதியிருக்கிறார்.





No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!