Wednesday, June 20, 2012

சர்வதேச விண் ஆய்வு மையத்தில் இணைந்தது சீன விண்கலம்


ஜியுகுவான்: சீனாவின் ஷென்சு-9' விண்கலம், விண்வெளியில் உள்ள, சீனாவின் விண் ஆராய்ச்சி மையத்துடன், நேற்று இணைந்தது. விண்வெளியில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக, அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் இணைந்து, விண்ணில் ஆய்வுக் கூடத்தை அமைத்துள்ளன. இதற்கு போட்டியாக, சீனாவும் விண்ணில் ஆய்வு மையத்தை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. வரும், 2020க்குள், இந்த பணிகளை முடிக்க, சீனா திட்டமிட்டுள்ளது. இந்த ஆய்வு மையத்துக்கு, "டியான்காங்' என பெயரிடப்பட்டுள்ளது. ஆய்வு மையம் தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்காக, "ஷென்சு-9' என்ற விண்கலத்தை, சீனா, கடந்த வாரம் விண்ணில் செலுத்தியது. இதில், முதன் முறையாக, விண்வெளி வீரர்களுடன்,லியூ யாங்,34, என்ற விமான பைலட்டும் சென்றுள்ளார். இவர்கள் விண்ணில், 13 நாட்கள் தங்கியிருந்து, பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள உள்ளனர். இதற்கிடையே, ஷென்சு விண்கலம், டியான்காங் விண்வெளி நிலையத்துடன், நேற்று, மெதுவாக சென்று இணைந்தது. மூன்று விண்வெளி வீரர்கள் விண்ணில் நடந்து சென்று, டியான்காங் ஆய்வு மையத்தில், சில உபகரணங்களை பொருத்த உள்ளனர்.








No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!