Tuesday, February 19, 2013

IT வேலை ? அடுத்த வேலை?

IT வேலை ? அடுத்த வேலை?


'IT வேலை' பெரும்பாலானோர் விரும்பும் வேலை. சிலர் தங்களது வாழ்க்கையே IT வேலையை நம்பியே இருக்கிறார்கள். ஒருவேளை IT மீண்டும் வலுவிழந்து, வேலைவைப்புகள் கானாமல்போனால்? நண்பா என்செய்வாய்?

சில வருடங்களுக்கு முன், IT துறையில் 'ரெசெசன்' என்ற நிலைவந்து பலரது வாழ்க்கையை நிலைகுலைய வைத்தது நினைவிருக்கிறதா? அந்த நிலை மீண்டும்வந்தால்?

 எனவே ஒரே வேலையை நம்பியிருக்காமல், பல வேலைகளையும், வேலையில் அப்டேட்டுடனும் இருக்கவேண்டியது அவசியமாகிறது.

IT துறையில் உள்ளவர்களின் வேலை பறிக்கபட்டால், வேறு என்னென்ன வேலைகளை செய்யலாம் என்ற ஒரு பொதுவான கருத்தை முன்மொழிகிறோம். நண்பர்களுடன் பகிரவும்.


சாப்ட்வேர் டெவெலப்பர்:

இந்த வேலையை பெரும்பாலானோர் செய்கிறார்கள். இருந்தாலும், இதன் அடிப்படையான ஜாவா, .நெட், மொபைல் அப்ளிகேசன், ஷேர் பாயிண்ட், வெப் அப்ளிகேசன் என பல்வேறு துறைகள் இதில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஏதாவதொன்றை குறிப்பிட்டு தேர்ந்தெடுத்து, அதில் சிறப்பாக செயல்பட்டாலே போதும்.

IT அனலிஸ்ட்:

சிலர் இம்மாதிரியான வேலைவாய்ப்பு இருப்பதையே மறந்திருப்பார்கள். அல்லது தெரியாமலே இருக்கும். இதும் ஒரு ம்=நல்ல வேலைவாய்ப்புதான். சம்பளங்களும் நன்றாகவே இருக்கும்.

இந்த வேலையைப்பொருத்தவரை பெரிய தரவுகளுடன் நாள்தோறும் போராடவேண்டியிருக்கும். மற்றபடி அருமையான வேலை.


டெக்னிகல் சப்போர்ட்:

எப்பொழுதும் அதிகஅளவு வேலைவாய்ப்புகள் இருப்பது இந்தத்துறையில் தான். இதை உதாசீனப்படுத்தாமல் இருப்பது நலம்தரும். தக்க சமயங்களில் இம்மாதிரியான வேலைகள் கைகொடுக்கும்.


சாப்ட்வேர் குவாலிட்டி அசூரன்ஸ்:

சில நேரங்களில் இதை டெஸ்டிங் எனவும் சொல்கிறார்கள். குறைந்த அளவு வேலைவாய்ப்புகள் இருப்பினும், இதில் சற்றே அறிவுள்ளவராக இருந்தால் சம்பளங்கள் லட்சங்களில் என்பதும் வேலை பறிக்கப்பட வாய்ப்புகள் குறைவென்பதும் மறுக்க முடியாத உண்மை.





No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!