உலகில் உள்ள 9 மிகப்பெரிய சாதனைகள்!!!
இந்த உலகில் பிறந்த அனைவருமே ஏதேனும் சாதிக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அவ்வாறு ஆசைப்படுபவர்கள் அனைத்தும் அவ்வளவு எளிதில் எதையும் சாதிப்பதில்லை. அதற்கு பின்னால் நிறைய முயற்சிகள் நிச்சயம் இருக்கும். மேலும் சாதனையாளர்களின் பெயர்களை பதியும் ஒரு அழியாத புத்தகம் தான் கின்னஸ் புத்தகம். சாதிக்க அனைவருக்கும், இந்த புத்தகத்தில் தனது பெயர் வர வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அவ்வாறு முயற்சித்ததில், சிலர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவார்கள்.
இத்தகைய சாதனைகள் ஒருவருக்கு மட்டுமின்றி, ஒரு நாட்டிற்கும் சேரும். மேலும் சாதனை புரிய நினைப்பவர்கள், இந்த உலகிலேயே தான் செய்ததை யாரும் மறக்கக் கூடாது என்று நினைத்து தான் சாதனையைத் தொடங்குவர். அத்தகைய உலக சாதனைகளில் ஒருசில சாதனைகளை மறக்கவே முடியாது. ஏனெனில் இந்த அளவு சாதனையானது அற்புதமாக, மறக்க முடியாத அளவில், அவரது சாதனையை முறியடிப்பதற்கு சரியான போட்டி தரும் வகையில் இருக்கும். மேலும் ஒவ்வொரு சாதனைகளும் ஒவ்வொரு விதத்தில் இருக்கும்.
இப்போது அத்தகைய சாதனைகளில் வித்தியாசமான சாதனைகளான உலகிலேயே மிகப் பெரிய கட்டிடம், சிலை, விமானம், பாலம், அரண்மனை, பேருந்து போன்றவை அடங்கும். ஆகவே இப்போது அந்த சாதனைகளுள் ஒருசிலவற்றை உங்களுக்காக பட்டியலிட்டுள்ளோம்.
உலகின் உயரமான கட்டிடம்
துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபா என்னும் கட்டிடம் தான் உலகிலேயே மிகவும் உயரமான கட்டிடம் ஆகும். 163 மாடிகளைக் கொண்ட இந்த கட்டிடம் 828 மீட்டர் உயரமுள்ளது.மிகப்பெரிய விமானம்
உலகிலேயே மிகவும் பெரிய விமானிகள் ஏற்றிச் செல்லும் விமானம் என்றால் அது ஏர்பஸ் ஏ380 தான். இந்த விமானத்தில் ஒரே சமயம் 555 பயணிகள் பயணிக்கலாம்.மிகப்பெரிய பயணிகள்-கப்பல்
ஓயாசிஸ் கப்பல் தான் உலகிலேயே மிகப்பெரிய பயணிகள் கப்பல் ஆகும். இந்த கப்பலில் ஒரே சமயத்தில் 6,300 பேர் பயணம் செய்ய முடியும். இந்த கப்பலின் நீளம் 360 மீட்டரும், 16 அடுக்கு மாடிகளையும், 2700 அறைகளையும் கொண்டது.மிகவும் நீளமான பாலம்
சீனாவில் உள்ள டொன்கி பாலம் 32.5 கி.மீ நீளமுடையது. இது கடலுக்கு மேலே கட்டப்பட்ட உலகின் அதி நீளமான பாலம் ஆகும்.Read more at: http://tamil.boldsky.com/insync/2013/9-biggest-world-records-002715.html#slide78069
மிகப்பெரிய ஹோட்டல்
லாஸ் வேகாஸில் உள்ள எம்.ஜி.எம் கிராண்ட் ஹோட்டல் தான் உலகிலேயே மிகவும் பெரிய ஹோட்டல். இந்த ஹோட்டலில் 6,276 அறைகள் உள்ளன.மிகப்பெரிய அரண்மனை
உலகின் மிகப்பெரிய அரண்மனை ரோமானியா நாட்டில் உள்ளது. இந்த அரண்மனையில் 500-க்கும் மேற்பட்ட படுக்கை அறைகளும், 55 சமையலறைகளும் மற்றும் 120 ஹாலும் உள்ளன.மிகப்பெரிய பேருந்து
உலகிலேயே நியோப்ளான் ஜம்போ-க்ரூசியர் (Neoplan Jumbo - cruiser)என்னும் பேருந்து தான் மிகவும் பெரியது. இது ஒரு 2-இன்-1 பஸ். டபுள் டக் பஸ். இந்த பேருந்தில் சுமார் 170 பயணிகள் பயணிக்க முடியும்.மிகப்பெரிய சிலை
பிரேசில் நாட்டில் உள்ள இயேசு கிறிஸ்துவ சிலை (Christ the Redeemer) தான், உலகிலேயே மிகவும் பெரியது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!