Wednesday, February 20, 2013

பிரான்ஸ்-ஜெர்மனியில் சாப்ட்வேர் நிறுவனங்களை வாங்க திட்டம்

பிரான்ஸ்-ஜெர்மனியில் சாப்ட்வேர் நிறுவனங்களை வாங்க இன்போசிஸ், விப்ரோ, டிசிஎஸ், எச்சிஎல் திட்டம்



பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் சிறிய நிறுவனங்களை வாங்க இன்போசிஸ், விப்ரோ, டிசிஎஸ், எச்சிஎல் ஆகியவை பேச்சு நடத்தி வருகின்றன.

ஐரோப்பாவில் இங்கிலாந்தில் மட்டுமே இந்திய சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். பிரான்ஸ், ஜெர்மனியில் பெரிய அளவில் கிளையன்டுகள் இல்லை.

இந் நிலையில் இந்த நாடுகள் மீது குறி வைத்துள்ள இந்தியாவின் மிகப் பெரிய சாப்ட்வேர் நிறுவனங்கள் முதல் கட்டமாக அந்த நாடுகளில் உள்ள சிறிய ஐடி நிறுவனங்களை விலைக்கு வாங்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. இதன்மூலம் பிரான்ஸ், ஜெர்மனியில் கால் ஊன்ற திட்டமிட்டுள்ளன.

இந்த நாடுகளையும் சேர்ந்த 3 நிறுவனங்களை இந்திய சாப்ட்வேர் நிறுவனங்கள் விலைபேசி வருகின்றன. இவற்றின் விலை ரூ. 300 கோடியில் இருந்து ரூ. 500 கோடி வரை இருக்கும் என்று தெரிகிறது.

ஐரோப்பாவின் ஒட்டுமொத்த சாப்ட்வேர் சந்தையில் பாதி பிரான்சிலும் ஜெர்மனியிலும் தான் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் சந்தை மதிப்பு ரூ. 10 லட்சம் கோடியாகும்.

இப்போது இந்த நாடுகளில் ஜெர்மனியைச் சேர்ந்த டி-சிஸ்டம்ஸ், பிரான்சின் கேப்ஜெமினி, அடோஸ், பின்லாந்தின் டியேடா ஒயிஜ் (Tieto Oyj) ஆகிய சாப்ட்வேர் நிறுவனங்களும், ஐபிஎம், எச்பி, அக்சென்சர் போன்ற அமெரிக்க நிறுவனங்களும் தான் பெரும்பாலான ஆர்டர்களைப் பெற்று வருகின்றன.

இந்த சந்தையைத் தான் இப்போது இன்போசிஸ், விப்ரோ, டிசிஎஸ், எச்சிஎல் ஆகிய இந்திய நிறுவனங்கள் குறி வைத்து களமிறங்கியுள்ளன. ஜெர்மன், பிரான்ஸ் நிறுவனங்களை வாங்குவதால் அந்த மொழிகள் தெரிந்த ஊழியர்கள் கிடைப்பதோடு, கிளையன்டுகளைப் பிடிப்பதும் எளிது என இந்திய நிறுவனங்கள் கருதுகின்றன.

சமீபத்தில் மும்பைச் சேர்ந்த ஜியோமெட்ரிக் சாப்ட்வேர் நிறுவனம் ஜெர்மனியின் 3கேப் டெக்னாலஜிஸ் நிறுவனத்தை 15 மில்லியன் டாலருக்கு வாங்கியது. கடந்த மாதம் கேப்ஜெமினி நிறுவனம் ஜெர்மனியின் சி1 குரூப்பைச் சேர்ந்த 6 சாப்ட்வேர், பிபிஓ, கால்சென்டர் நிறுவனங்களை ஒட்டுமொத்தமாக வாங்கியது.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/02/20/india-it-s-european-links-infosys-wipro-tcs-hcl-acquisition-170129.html

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!