Tuesday, February 19, 2013

ஜேர்மனியில் கருத்தடை மாத்திரைக்கு கட்டுப்பாடு தளர்வு

ஜேர்மனியில் கருத்தடை மாத்திரைக்கு கட்டுப்பாடு தளர்வு



ஜேர்மனியில் கத்தோலிக்க திருச்சபைகளின் வழிகாட்டுதலின் படி பாலியல் வன்முறையில் பாதிக்கபட்டவர்களுக்கு கருத்தடை மாத்திரை வழங்கலாம் என்று முடிவெடுத்துள்ளனர்.
ஜேர்மனி போதகர்கள் இணைந்து நடத்திய கூட்டம் குறித்து தலைமை போதகர் ராபர்ட் ஜோலிச்(Robert Zollitsch) கூறுகையில், இந்த கருத்தடை மாத்திரை பாலியல் வன்முறைக்கு உட்பட்டவர்களுக்கு மட்டும் வழங்கலாம் என்று பல்வேறு போதகர்கள் சேர்ந்து ஆலோசித்து முடிவெடுத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் வடக்கு பகுதியில் உள்ள கத்தோலிக்க மருத்துவமனைகளை நாடி வரும் பாலியல் வன்முறைக்கு உட்பட்ட பெண்களுக்கு கருத்தடை மாத்திரைகள் தரமால் கட்டுபாட்டை கடைபிடித்து வந்துள்ளனர்.

இது குறித்து சுகாதார அமைச்சர் கூறுகையில், பாலியல் வன்முறைக்கு உட்பட்டவர்களுக்கு கருத்தடை மாத்திரை வழக்கலாம். ஏனெனில் இதன் மூலம் அவர்கள் கருத்தறிக்காமல் பாதுகாக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த கூடுகையில் 16வது போப் பதவி விலகல் பற்றியும் பேசப்பட்டது. அடுத்து வரப்போகும் போப் 70 வயதுக்கு உட்பட்டவராக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!