ஷாங்காயில் கேன்சர் பயத்தால் வாபஸ் பெறப்பட்ட பள்ளிச்சீருடைகள்
புற்றுநோய் பயத்தால் சீனாவில் உள்ள 21 துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவியரை சீருடை அணிய வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.தெற்கு சீனாவில் உள்ள ஷாங்காயில் உள்ளது ஊக்சியா கிளோதிங் கம்பெனி லிமிடெட். இந்த நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளாக பள்ளிகளுக்கு சீருடை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் இந்த நிறுவனத்தில் திடீர் என்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இங்கு தயாரிக்கப்பட்ட சீருடைகளில் தடை செய்யப்பட்ட சாயம் பயன்படுத்தப்பட்டது தெரிய வந்தது. அந்த சாயத்தால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து அங்கு தயாரிக்கப்பட்ட சீருடைகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் இது குறித்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இங்கு தயாரிக்கப்பட்ட சீருடைகளில் 6 பேட்ச் உடைகள் தரமற்றவை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த நிறுவனத்திடம் இருந்து ஷாங்காயில் உள்ள 21 துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் சீருடைகள் வாங்கியுள்ளன. இதையடுத்து அந்த சீருடைகளை அணிய வேண்டாம் என்று மாணவர்களை வலியுறுத்துமாறு கல்வித் துறை அதிகாரிகள் பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
அந்த சீருடைகள் திரும்பப் பெறப்பட்டு அதன் தரத்தை அதிகாரிகள் சோதிக்கவிருக்கின்றனர் என்று தகவல் கிடைத்துள்ளது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!