சிங்கிளாக இருந்தால் செய்யக்கூடிய செயல்கள்!!!
இந்த உலகில் காதலின்றி யாரும் இருக்கமாட்டார்கள் தான். அத்தகைய காதல் ஏன் ஒரு பெண்/ஆண் மீது மட்டும் தான் இருக்க வேண்டுமா என்ன? பெற்றோர் மீது இருக்கக்கூடாதா? என்று பலர் கேட்பார்கள். ஏனெனில் அவர்களுக்கு காதலில் விருப்பமில்லை.
இதற்கு காரணம் காதல் செய்தால், இப்படி தான் இருக்க வேண்டுமென்ற கட்டாயம் இருக்கும், சுதந்திரம் இருக்காது என்பதாலேயே தான். இவ்வாறு காதலின்றி சிங்கிளாக இருக்கும் போது, அதில் நன்மைகள் மற்றும் தீமைகள் இருக்கின்றன. இவை ஒவ்வொருவரின் மனதைப் பொறுத்தது. அவ்வாறு சிங்கிளாக இருப்பவர்கள், அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்களிடம் காதல் பற்றி கேட்டால், "முட்டாள்கள் தான் காதலில் விழுவார்கள்" என்று சொல்வார்கள்.
ஆனால் அத்தகைய காதலில் விழாமல், சிங்கிளாக சந்தோஷத்துடன் இருந்தால், ஒவ்வோரு நொடியையும் சந்தோஷமாக அனுபவித்து வாழலாம் என்று சொல்வார்கள். இவ்வாறெல்லாம் காதலை நினைப்பதற்கு பெரும் காரணம், இன்றைய நிறைய காதல்கள் தோல்வியிலேயே முடிவதோடு, அதனால் பலர் தற்கொலை முயற்சி என்றெல்லாம் செல்கின்றனர். எனவே தான் பலர் காதலை வெறுக்கின்றனர். சரி, இப்போது சிங்கிளாக இருந்தால் என்னவெல்லாம் செய்யலாம் என்று பார்ப்போமா!!!
சிங்கிளாக இருக்கும் போது செய்யக்கூடியவை...
* சிங்கிளாக இருக்கும் போது நண்பர்கள் தான் காதலர்கள். ஏனெனில் இந்த நேரத்தில் நமது சந்தோஷம் மற்றும் துக்கத்தை பகிர்ந்து கொள்பவர்கள் நண்பர்கள் தான். அத்தகையவர்களுடன் எப்போது வேண்டுமானாலும் சினிமாவிற்கு போகலாம். அதுவும் உயிர் தோழனாகவோ அல்லது தோழியாகவோ அல்லது நண்பர் கூட்டத்துடனோ இருக்கலாம். இதுவே காதலன்/காதலி இருந்தால், நண்பர்களுடன் நிம்மதியாக நேரத்தை செலவழிக்கவே முடியாது. அடிக்கடி போன் வந்து டென்சன் இருந்து கொண்டே இருக்கும்.
* எந்த ஒரு பாய் ப்ரெண்ட் அல்லது கேர்ள் ப்ரெண்ட் இல்லையென்றால், சொந்தம் கொண்டாட யாரும் இருக்கமாட்டார்கள். ஆகவே தனியாக இருப்பதால், எந்த ஒரு முடிவு எடுக்கும் போதும் நீங்களே ராஜா, ராணி. உங்களுக்கு மனதில் தோன்றுவதை செய்ய யாரிடமும் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை.
* காதலிப்பவர்களிடம் கேட்டுப் பாருங்கள், அவர்கள் காதலன்/காதலியை ஷாப்பிங் அழைத்துச் செல்லும் போது, எவ்வளவு செலவு செய்ய வேண்டியுள்ளது. அதிலும் பிடிக்கவில்லை என்று சொன்னாலும், மற்றவருக்குப் பிடித்தால் வாங்கிக் கொடுக்க வேண்டும். அவ்வாறு வாங்கி தராவிட்டால், சிறிய சண்டை ஏற்படும். என்ன கொடுமை சரவணா இது, இந்த மாதிரியான சண்டையெல்லாம் தேவையா? ஆனால் அதுவே சிங்கிளாக இருந்தால், அந்த பணத்தை வைத்து, எத்தனை விருப்பமானதை மட்டும் வாங்கி மகிழலாம். பணமும் மிச்சமாகும்.
* முக்கியமாக யாரை வேண்டுமானாலும் சைட் அடிக்கலாம். காதலித்தால், அந்த உரிமை போய்விடும். எப்படியெனில் நீங்கள் சைட் அடிக்கும் போது, உங்கள் துணை பார்த்துவிட்டால், பிறகு அவ்வளவு தான்.
* சிகரெட், மது அருந்துதல் போன்ற எந்த ஒரு செயலையும் தைரியமாக, யாருக்கும் பயப்படாமல் செய்யலாம்.
* மன நிம்மதியுடன் எந்த ஒரு விளையாட்டையும், நண்பர்களுடன் சந்தோஷமாக விளையாடலாம். ஆனால் காதலித்துவிட்டால், எப்போது பார்த்தாலும் போன் பேசிக் கொண்டே இருக்க வேண்டும். பாருங்கப்பா, ஒரு விளையாட்டை கூட நிம்மதியா விளையாட முடியலைன்னா எப்படிப்பா முடியும்?
நீங்க சிங்கிளா இருக்கீங்களா? அப்படின்னா நீங்க என்னலாம் செய்வீர்கள் என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...