6 மாதங்களில் இல்லாத அளவுக்கு தங்கத்தின் விலை இவ்வளவு குறைந்தது ஏன்?
கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு முதன்முறையாக தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு முழுவதுமே தொடர்ந்து விலை உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இப்போது திடீரென்று அதே இடத்தில் நிற்கிறது.
சர்வதேச சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி ஒரு அவுன்ஸ் (ஒரு அவுன்ஸ் என்பது 28.34 கிராம்) தங்கத்தின் விலை ரூ. 86,400 ஆக இருந்தது.
கடந்த 2011ம் ஆண்டு இதே அளவு தங்கத்தின் விலை ரூ. 1,03,734 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் குறைய ஆரம்பித்த தங்கத்தின் விலை தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து இப்போது கிராம் ரூ. 2,811க்கு விற்பனையாகி வருகிறது.
இந்தியாவும் சீனாவும் தான் மிக அதிக அளவிலான தங்கத்தை இறக்குமதி செய்து வருகின்றன. ஆனால், விலை ஓரளவுக்கு மேல் மிகவும் உயர்ந்துவிட்டதால், அதை வாங்குவதையும் இந்தியாவும் சீனாவும் குறைத்துவிட்டன.
மேலும் தங்கத்தில் போடப்படும் முதலீடுகளால் நாட்டுக்கு எந்த லாபமும் இல்லை என்பதாலும், மக்களின் இந்த முதலீடுகளை வங்கிகளின் சேமிப்பிலும், பங்குகளிலும், பத்திரங்களிலும் போடச் செய்வதற்காகவும் மத்திய அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை உயர்த்திவிட்டது. இதனாலும் விலை மிகக் கடுமையாக உயர்ந்தது.
வங்கிகள், பங்குகள், பத்திரங்களில் உள்ள பணத்தை மத்திய அரசு தனது புதிய கட்டமைப்புப் பணிகளுக்கு பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் இந்த வரி அதிகரிப்பால் தங்கத்தை இறக்குமதி செய்வதை இந்திய இறக்குமதியாளர்கள் 12 சதவீதம் அளவுக்கு கடந்த ஆண்டு குறைத்துவிட்டதும் குறிப்பிடத்தக்கது.
அதே போல சீன பொருளாதாரமும் முதல் முறையாக மூச்சு முட்டி வருவதால் அங்கும் தங்கம் இறக்குமதி குறைந்துவிட்டது. உலகின் மிகப் பெரிய தங்க சந்தைகளான இந்தியாவும் சீனாவிலும் டிமாண்ட் குறைந்துவிட்டதையடுத்து, தங்கத்தின் விலையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. இது தான் தங்கத்தின் விலை குறைந்ததற்கு முக்கியக் காரணமாகும்.
உலகின் முன்னணி தங்கச் சுரங்க உரிமையாளான பாரிக் கோல்ட் கார்ப்பரேசன் தனது தங்கம் வெட்டி எடுக்கும் பணியை 10 சதவீதம் அளவுக்குக் குறைத்தே விட்டதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!