Tuesday, February 19, 2013

துரித வளர்ச்சியை நோக்கி டொரண்டோ

துரித வளர்ச்சியை நோக்கி டொரண்டோ


டொரண்டோவின் பொருளாதாரமானது 2013ம் ஆண்டில் துரித வளர்ச்சிபெறும் என கனடிய மாநாடு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
டொரண்டோவின் பொருளியலாளர்கள் இந்த வருடமானது பிரகாசமானதாகவிருக்கும் எனவும் அதனால் பொருளாதாரத்தில் துரித வளர்ச்சி ஏற்படுமெனக் கூறியிருக்கின்றார்கள். இதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் கனடாவானது வளர்ச்சியடையும் நகர்களுக்கு அண்மையில் இருக்கின்றது என்பதாகும்.

அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்படுகின்ற மாற்றமானது கனடியப் பொருளாதாரத்தைப் பாதிக்கின்றது என்பது வெளிப்படை. அமெரிக்காவில் தற்போது ஏற்றுமதிக்கான தேவை ஏற்படுகின்ற நிலமையானது திரும்புகின்றது.

அத்துடன் ஒன்றாரியோவில் பெரிதும் செய்து கொடுக்கப்படுகின்றவற்றின் தேவையும் அதிகரிக்கும். அத்துடன் கடந்த சில மாதங்களாக அமெரிக்காவில் தொழில் உருவாகுதல் என்பது திடமாகவுள்ளது.

அதிகமான அமெரிக்க மக்கள் கார்களை வாங்குவது திரும்பவும் அதிகரித்துள்ளது. இவ்வாறு அமெரிக்காவின் பொருளாதாரமானது கனடிய வாகன உற்பத்தி வளர்ச்சி பெற வழி வகுக்கின்றது.

எனவே இத்தகைய சாதகமான காரணிகளினால் டொரண்டோவின் பொருளாதார வளர்ச்சியானது 2.8 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!