Thursday, October 11, 2012

Top Photo Story: ராட்சத சுறாக்களால் கடிக்கப்பட்ட 47 டன் திமிங்கிலம் கரைக்கு வந்தது!.

Top Photo Story: ராட்சத சுறாக்களால் கடிக்கப்பட்ட 47 டன் திமிங்கிலம் கரைக்கு வந்தது!.



 


தென்னாபிரிக்க கடற்கரையின் பெரிய பகுதி பொதுமக்கள் பாவனைக்கு விடப்படாமல் பல மணி நேரத்துக்கு மூடப்பட்டது. காரணம், 15 மீட்டர் நீளமான திமிங்கிலம் ஒன்று கரையில் ஒதுங்கியதுதான். ராட்சத சுறாக்களால் தாக்கப்பட்ட அடையாளங்கள், இறந்துபோன திமிங்கிலத்தின் உடலில் இருந்தன. தென்னாபிரிக்காவின் கேப்-டவுன் நகரில் உள்ள முய்சென்பர்க் கடற்கரையிலேயே திமிங்கிலத்தின் உடல் ஒதுங்கியது.





கடலின் கரை பகுதியில் திமிங்கிலத்தின் உடல் பாதி கடலில் மூழ்கிய நிலையில் காணப்பட்டது. அப்போது கடலின் கரை பகுதிவரை சில ராட்சத சுறாக்கள் வந்து திமிங்கிலத்தின் உடலை கடித்துக் கொண்டிருந்தன. அதனால்தான், கடற்கரையின் பெரிய பகுதி பொதுமக்கள் பாவனைக்கு விடப்படாமல் பல மணி நேரத்துக்கு மூடப்பட்டது.





வேடிக்கை பார்க்கவந்த பொதுமக்கள் யாராவது கடலில் இறங்கினால், ராட்சத சுறாக்கள் தாக்கலாம் என்ற சாத்தியமே இதற்கு காரணம். கடந்த 2005-ம் ஆண்டு இதே கடற்கரையில் ஜே.பி.அன்ட்ரூஸ் என்ற டீன்ஏஜ் வாலிபன் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது, கரைப் பகுதிக்கு வந்த ராட்சத சுறாக்கள் தாக்கின.





கரையில் ஒதுங்கிய அன்ட்ரூஸ் இறந்து விட்டதாக அந்த இடத்தில் வைத்தே டாக்டர் கூறிவிட்டார். ஆனால், அதன்பின் அன்ட்ரூஸின் உடலில் உயிர் இருப்பது தெரிந்தது. இறுதியில் அவர் உயிர்பிழைத்துவிட்டார். ஆனால், ராட்சத சுறா அவரது ஒரு காலை விழுங்கி விட்டிருந்தது. இம்முறை திமிங்கிலம் கரையில் ஒதுங்கிய தகவல் கிடைத்து 15 நிமிடங்களிலேயே, கடற்கரையில் இருந்த பொதுமக்கள் அனைவரும் போலீஸால் அப்புறப்படுத்தப்பட்டு விட்டனர்.





அதன்பின், கடற்கரை பக்கமாக யாரும் வரவேண்டாம் என போலீஸார் டி.வி. ரேடியோ மூலம் அறிவித்தல் விடுத்தனர். முய்சென்பர்க்கில் இருந்து, மொன்வாபிசி என்ற இடம்வரை கடற்கரை மூடப்பட்டது.




அதையடுத்து, டிசாஸ்டர் ரெஸ்பான்ஸ் டீம் களத்தில் இறங்கியது. மேலும் ராட்சத சுறாக்கள் கடிக்காமல் இருப்பதற்காக திமிங்கிலத்தின் உடலை கடலில் இருந்து முழுமையாக இழுத்து கடற்கரை மணலுக்கு கொண்டு வந்தனர். அது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. காரணம், இறந்த திமிங்கிலத்தின் எடை மிக அதிகமாக இருந்தது! (பின்னர் அளவீடு செய்யப்பட்டபோது, திமிங்கிலத்தின் எடை 47,000 கிலோ என்று தெரியவந்தது)





திமிங்கிலத்தின் உடல் முழுமையான தரைக்கு இழுக்கப்படும்வரை, கடலின் கரைப் பகுதியில் ராட்சத சுறாக்களின் நடமாட்டம் இருக்கும் என்பதால், மணலுக்கு இழுக்கும் பணி வேகமாக செய்யப்பட்டது. இந்த பணியில் சுமார் 200 பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.





மணலுக்கு முற்றாக உடல் இழுக்கப்பட்டதும், மணலில் இறக்கப்பட்ட புல்டோசர்கள் திமிங்கிலத்தின் உடலை ரோல் பண்ண வைத்து, ட்ரக் ஒன்றின் ரோலர்-பெட்டில் லொட் பண்ணும் முயற்சியில் ஈடுபட்டன. பலமணி நேரம் எடுத்தது அந்த பணி.


காரணம், ட்ரக்கை மணலில் இறக்க முடியாது. ட்ரக் மணலில் இறக்கப்பட்டு, அதில் திமிங்கிலமும் ஏற்றப்பட்டால், மணலில் ட்ரக்கின் சக்கரங்கள் புதைந்து போய்விடலாம். இதனால், கடற்கரையை ஒட்டிய வீதியில் ட்ரக் நிறுத்தப்பட்டிருக்க, திமிங்கிலத்தின் உடல் புல்டோசர்களால் உருட்டிச் செல்லப்பட்டது.





ட்ரக்கில் திமிங்கிலம் லோட் செய்யப்பட்டபோதே, அது போகவேண்டிய பாதையை கிளியர் செய்யும்படி உத்தரவிடப்பட்டது. ட்ரக் செல்லும் பாதையில் இருந்த போக்குவரத்து, வேறு வழிகளால் திருப்பி விடப்பட்டது.


 


 அதன்பின், வீதியின் ஒருபக்க ட்ராஃபிக் முழுமையாக நிறுத்தப்பட்டு, திமிங்கிலத்தின் உடல் ஏற்றப்பட்ட ட்ரக் ரோலர்-பெட் வீதியில் சென்றது. நகருக்கு வெளியே  குப்பைகள் கொட்டப்படும் ராட்சத கிடங்குக்குள் திமிங்கிலத்தின் உடல் போடப்பட்டுள்ளது.




ராட்சத சுறாக்களால் தாக்கப்பட்டு திமிங்கிலம் கொல்லப்பட்டதா, அல்லது திமிங்கிலம் இறந்த பின்னர் ராட்சத சுறாக்கள் அதன் உடலை கடித்தனவா என்று சொல்லமுடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.




நம்ம ஊரிலயா இருந்தா என்ன செஞ்சு இருப்பாங்க? உங்க கமெண்ட்ஸ் ய் கட்டாயம் கீழ சொல்லுங்க .....



(Giant sharks bite 47 tonne whale came to the shore.) நன்றி ரிசி அண்ணா

2 comments:

  1. கூறு போட்டு இன்னேறம் வித்து தீந்திருக்குமோ..?

    ReplyDelete
    Replies
    1. நல்ல நேரம் அது நம் நாட்டில் கரை ஒதுங்க வில்லை ஆதலால் அதை அப்படியே புதைத்து விட்டார்கள்

      Delete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!