Thursday, June 21, 2012

மதுவுக்கு விரைவில் அடிமையாகும் பெண்கள்! ஆய்வில் அதிர்ச்சி ரிப்போர்ட்



அளவுக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ள பெண்கள் வெளிப்படையாக ஒருபோதும் அதை ஒப்புக்கொள்வதில்லை.

ஆனால் மதுவுக்கு ஆண்களை விட பெண்களே விரைவில் அடிமையாகின்றனர்.

இதனால் தான் பிரிட்டிஷ் அரசு சகல வயதினருக்குமான பாதுகாப்பான குடி வரையறையை பெண்களுக்கு வாராந்தம் 14 அலகுகளாகவும், ஆண்களுக்கு 21 அலகுகளாகவும் வகுத்துள்ளது.

இளம் பெண்கள் மத்தியில் மதுப் பழக்கம் அதிகரித்து வருவதாகவும் அதனால் அவர்கள் மத்தியில் நுரையீரல் சார்ந்த நோய்கள் அதிகரித்து வருவதாகவும் டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

ஆண்களைவிட விரைவில் பெண்கள் மதுவுக்கு அடிமையாவது போலவே மது சம்பந்தமான நோய்களுக்கும் பெண்களே அதிகம் ஆளாகின்றனர்.

நுரையீரலில் மது ஏற்படுத்தும் பாதிப்பு இரு பாலாருக்கும் ஒரே விதத்திலேயே அமைந்துள்ளது. பெண்கள் மதுவுக்கு விரைவில் அடிமையாக முக்கிய காரணம் அவர்களது உடம்பில் நீர்த்தன்மை குறைவாக இருப்பதாகும்.

ஆண்களது உடம்பில் 65 வீதம் நீர்த்தன்மை காணப்படுகின்றது. பெண்களுக்கு இது 55 வீதமாகவே உள்ளது. லண்டன் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் டொக்டர்.மார்ஷா மோர்கன் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்

Wednesday, June 20, 2012

பாட்டு பாடும் கிப்பன் குரங்குகள்


ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், சீனா, லாவோ, கம்போடியா மற்றும் வியட்நாம் போன்ற ஆசிய நாடுகளின் மழை காடுகளில் காணப்படும் கிப்பன் வகை குரங்குகள் பற்றி ஆய்வு மேற்கொண்டனர். பெரும்பாலும் மனிதனை ஒத்து காணப்படும் இந்த கிப்பன் குரங்குகள் தங்களுக்கென்று பாடல்கள் வைத்திருக்கின்றன. தனது இணையை கவரவும், எல்லைகளை பிறருக்கு தெரியபடுத்தவும், பிறரோடு தொடர்பு கொள்வதற்கும் என்று பல விசயங்களுக்கு பாடல்களை பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளன. இதில் டூயட் பாடல்களும் அடங்கும்.

ஆய்வுக்கு 92 டூயட் பாடல்கள் உட்பட 400 பாடல் மாதிரிகளை சேகரித்தனர். பின்னர் அந்த பாடல்களை ஏறத்தாழ 53 வேறுபட்ட அலைவரிசைகளில் பிரித்து சோதனை செய்தனர். அதில் கம்போடியா, லாவோ மற்றும் வியட்நாம் ஆகிய பகுதிகளை சேர்ந்த கிப்பன்கள் ஒரே மாதிரியான டி.என்.ஏ. அமைப்பை கொண்டிருந்தது. மேலும் 4 ரகமான தனித்தன்மை வாய்ந்த பாடல்களை அவை பாடுவதும் தெரிய வந்தது. குறிப்பாக வடக்கு வியட்நாம், சீனா ஆகிய பகுதிகளை சேர்ந்த கிப்பன்கள், தெற்கு பகுதியை சேர்ந்த கிப்பன்களை காட்டிலும் பல வகைகளில் வேறுபட்டிருப்பது ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது.

ஒரு நாளைக்கு 16 முறை சூரிய உதயத்தை கண்டு ரசிக்கும் விண்வெளி வீரர்கள்


விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டுள்ள சீன வீரர்கள் ஒரு நாளைக்கு 16 முறை சூரிய உதயத்தையும், சூரிய அஸ்தமனத்தையும் பார்க்கின்றனர்.
விண்வெளியில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகள் இணைந்து விண்ணில் ஆய்வுக்கூடத்தை அமைத்துள்ளன.

இதற்கு போட்டியாக சீனாவும் விண்ணில் ஆய்வு மையத்தை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. வரும் 2020ஆம் ஆண்டுக்குள் இந்த பணிகளை முடிக்க சீனா திட்டமிட்டுள்ளது. இந்த ஆய்வு மையத்துக்கு டியான்காங் என பெயரிடப்பட்டுள்ளது.
ஆய்வு மையம் தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்காக ஷென்சு-9 என்ற விண்கலத்தை, சீனா கடந்த வாரம் விண்ணில் செலுத்தியது.
இதில் முதன் முறையாக விண்வெளி வீரர்களுடன் லியூ யாங்(வயது 34) என்ற விமான பைலட்டும் சென்றுள்ளார். இவர்கள் விண்ணில் 13 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
இதற்கிடையே ஷென்சு விண்கலம் டியான்காங் விண்வெளி நிலையத்துடன் நேற்று முன்தினம் இணைந்தது. சீனாவின் தரைகட்டுப்பாட்டு தளத்திலிருந்து நேற்று இவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டது.
மின்னஞ்சலில் புகைப்படம், வாசகங்கள், வீடியோ ஆகியவை சேர்த்து அனுப்பப்பட்டன. இவைகள் தங்களுக்கு கிடைத்ததாக மூன்று விண்வெளி வீரர்களும் பதில் அனுப்பியுள்ளனர்.
சீன நேரப்படி, காலை 6 மணிக்கு தூங்கி எழுந்து விடுவதாகவும், ஒரு வீரர் தூங்கும் போது மற்றவர்கள் விழித்திருப்பதாகவும், தாங்கள் தங்கியுள்ள அறையின் வெப்பநிலை 22 முதல் 23 டிகிரி செல்சியஸ் வரை உள்ளதாகவும், தாங்கள் தங்கியுள்ள விண் ஆராய்ச்சி மையம் 90 நிமிடங்களுக்கு ஒரு முறை பூமியை சுற்றுவதால் 24 மணி நேரத்தில் 16 சூரிய உதயத்தையும், 16 சூரிய அஸ்தமனத்தையும் பார்ப்பதாக இவர்கள் தெரிவித்துள்ளனர்.




சர்வதேச விண் ஆய்வு மையத்தில் இணைந்தது சீன விண்கலம்


ஜியுகுவான்: சீனாவின் ஷென்சு-9' விண்கலம், விண்வெளியில் உள்ள, சீனாவின் விண் ஆராய்ச்சி மையத்துடன், நேற்று இணைந்தது. விண்வெளியில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக, அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் இணைந்து, விண்ணில் ஆய்வுக் கூடத்தை அமைத்துள்ளன. இதற்கு போட்டியாக, சீனாவும் விண்ணில் ஆய்வு மையத்தை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. வரும், 2020க்குள், இந்த பணிகளை முடிக்க, சீனா திட்டமிட்டுள்ளது. இந்த ஆய்வு மையத்துக்கு, "டியான்காங்' என பெயரிடப்பட்டுள்ளது. ஆய்வு மையம் தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்காக, "ஷென்சு-9' என்ற விண்கலத்தை, சீனா, கடந்த வாரம் விண்ணில் செலுத்தியது. இதில், முதன் முறையாக, விண்வெளி வீரர்களுடன்,லியூ யாங்,34, என்ற விமான பைலட்டும் சென்றுள்ளார். இவர்கள் விண்ணில், 13 நாட்கள் தங்கியிருந்து, பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள உள்ளனர். இதற்கிடையே, ஷென்சு விண்கலம், டியான்காங் விண்வெளி நிலையத்துடன், நேற்று, மெதுவாக சென்று இணைந்தது. மூன்று விண்வெளி வீரர்கள் விண்ணில் நடந்து சென்று, டியான்காங் ஆய்வு மையத்தில், சில உபகரணங்களை பொருத்த உள்ளனர்.