ஸ்டெர்லைட்: அன்று முதல் இன்று வரை
* தூத்துக்குடியில் 1992ம் ஆண்டு ஆலைக்கு முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.
* 1995ம் ஆண்டிலிருந்து ழீ1,500 கோடி முதலீட்டில் நிர்மாணிக்கப்பட்ட ஆலை சிப்காட்டிற்கு இடம் பெயர்ந்தது. அதே ஆண்டில் உற்பத்தியை தொடங்கியது.
* முதன்மையான பொருளாக தாமிரமும் காப்பர் கேதோடு, பாஸ்பாரிக் அமிலம், சல்பியூரிக், ஜிப்சம், பெர்ரோசாண்ட் உற்பத்தி செய்யப்படுகிறது.
* தூத்துக்குடி துறைமுகம் மூலம் மூலப்பொருட்கள் இறக்குமதி. துறைமுகத்தின் 2வது பெரிய இறக்குமதி நிறுவனம்.
* 4 ஷிப்ட்களில் நேரடியாக 6000 பேரும், மறைமுகமாக 10,000 மேற்பட்டோரும் பணியாற்று கின்றனர்.
* அரசுக்கு ஆண்டு வரி வருவாய் ழீ1,600கோடி.
* ஆலையின் உற்பத்தி பொருளை நம்பி தமிழகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட சிறிய துணைத் தொழிற்சாலைகள்.
* தூய சுற்றுச்சூழலுக்கான தேசிய அமைப்பின் (என்.டி.சி.இ.) சார்பில் 1996ல் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
* 1997ம் ஆண்டில் மதிமுக பொதுசெயலா ளர் வைகோ ஆலையை மூட ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து தூத்துக்குடிக்கு நடைபயணம். சென்னை ஐகோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார்.
* 2010ல் ஆலையில் வாயு கசிந்ததில் ஒப்பந்த தொழிலாளி ஒருவர் இறந்தார். இதையடுத்து பிரச்னை பெரிதானது.
* 2010 செப்டம்பர் 28ல் சென்னை உயர் நீதிமன்றம், காற்று, தண்ணீர் ஆகியவற்றில் மாசு ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட உத்தரவிட்டது. நீதிபதிகள் எலிபி தர்மராவ், என்.பால்வசந்த குமார் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் 25 பக்க தீர்ப்பை வழங்கியது.
* 2010ல் உயர் நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்தது. அதேநேரத்தில் உச்ச நீதிமன்றத்திலும் மேல்முறை யீடு மனு தாக்கல் செய்தது. உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை கோரியது.
* 2010ல் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
* 2012ல் வழக்கு விசாரணை, வைகோ வாதிட்டார்.
* 2013 மார்ச் 23ம் தேதி அதிகாலை திடீரென்று காற்றில் விஷவாயு கலப்பு.
* ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து விஷவாயு கசிந்ததை மாசு கட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்தது.
* 24ம் தேதி கலெக்டர் நோட்டீஸ்
* 28ம் தேதி வைகோ, நல்லகண்ணு தலைமையில் முற்றுகை போராட்டம்.
* 29ம் தேதி நள்ளிரவு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஆலையை மூட உத்தரவு.
* 30ம் தேதி மூடல் உத்தரவை ஆலை நுழைவாயிலில் ஒட்டப்பட்டது. மின் சப்ளை துண்டிப்பு. ஆலை மூடப்பட்டது.
ஜெயலலிதாவுக்கு வைகோ பாராட்டு : ஸ்டெர்லைட் தாமிர உருட்டு ஆலையை அகற்றக்கோரி, கடந்த 17 ஆண்டுகளாக விவசாயிகள், மீனவர்கள், வியாபாரப் பெருமக்கள், தொழிலாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராடி வந்தோம். ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து எண்ணற்ற போராட்டங்களை தொடர்ந்து மதிமுக நடத்தியது. ஆலையை மூடிட நடவடிக்கை மேற்கொண்ட தமிழக முதல்வருக்கு மனம் நிறைந்த பாராட்டை தெரிவித்துக்கொள்கிறேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!