அஸ்ட்ரோயிட்டுக்களை அழிப்பதற்கு விஞ்ஞானிகள் புதிய திட்டம்
அஸ்ட்ரோயிட்டுக்கள் எனப்படும் விண்ணிலிருந்து பூமியை நோக்கிவரும் எரிகற்களை அழிப்பதற்கு சூரியக்கதிர்ளால் வலுவூட்டப்பட்ட லேசர் கதிர்களை பயன்படுத்தும் புதிய திட்டம் ஒன்றினை முன்மொழிந்துள்ளனர்.
இத்திட்டமானது அமெரிக்காவில் அமைந்துள்ள Polytechnic பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகளால் முன்வைக்கப்பட்டுள்ளது.
இவ்வகையான 10 தொன் எடைகொண்ட அஸ்ட்ரோயிட் அண்மையில் ரஷ்யாவை தாக்கி பலத்த சேதத்தை விளைவித்ததைத்தொடர்ந்து இப்புதிய பாதுகாப்பு பொறிமுறை விஞ்ஞானிகளால் முன்மொழியப்பட்டுள்ளதுடன் இப்பொறிமுறை மூலம் பூமியிலிருந்து 27,700 கிலோமீட்டர்கள் தொலைவில் வைத்தே குறித்த அஸ்ட்ரோயிட்டுக்களை அழிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!