மின் கட்டண உயர்வு எதிரொலி- பல்கேரியாவில் அரசு கவிழ்ந்தது!
வெங்காய விலை உயர்வால் இந்தியாவில் அரசுகள் கவிழ்ந்த வரலாறுகள் உண்டு.. இதே போல்தான் கடுமையான மின் கட்டண உயர்வால் பல்கேரியா நாட்டு அரசாங்கமும் கவிழ்ந்து போயிருக்கிறது.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பல்கேரியாவில் அண்மையில் கடுமையாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இது அந்நாட்டு மக்களிடத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்தன. பல இடங்களில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையேயான மோதலும் வெடித்தது. இதைத் தொடர்ந்து பல்கேரியாவின் பிரதமர் போரிசாவ் நேற்று ராஜினாமா செய்தார்.
இதைத் தொடர்ந்து பல்கேரியாவில் பார்லிமெண்ட் தேர்தல் வரும் ஜூலை மாதம் நடத்தப்படுமா? அல்லது அதற்கு முன்பே நடத்தப்படுமா? என்பது ஓரிரு நாளில் தெரியவரும்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!