பெண்களின் தன்னம்பிக்கை 32 வயதில் உச்சம் : தங்களை கவர்ச்சியாக உணர்வது 28ல்
பெண்களின் தன்னம்பிக்கை 32 வயதில்தான் உச்சத்தில் இருக்கிறது. 28 வயதில்தான் மிகவும் கவர்ச்சியாக உணர்கிறார்களாம். இங்கிலாந்தில் 2 ஆயிரம் பெண்களை வைத்து ஒரு சர்வே நடத்தப்பட்டது. படிப்பு முடித்து நல்ல வேலையில் சேர்ந்து எந்த வயதில் செட்டில் ஆகின்றனர், எந்த வயதில் திருமணம், எப்போது மகிழ்ச்சி என்பது உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து கேட்கப்பட்டது. சர்வே ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளதாவது தன்னை அழகாக, இளமையாக காட்டிக் கொள்ளும் ஆர்வம் பெண்களுக்கு எல்லா வயதிலும் உண்டு. ஆனாலும், 28 வயதில்தான் நாம் மிகமிக கவர்ச்சியாக இருக்கிறோம் என்று பெண்கள் நம்புகிறார்கள். தன் இடை, பின்பக்க அழகில் இந்த வயதில்தான் அதிக கவனம் செலுத்துகின்றனர். இந்த அழகுகள் லிமிட்டை தாண்டிவிடாமல் கவனமாக பார்த்துக் கொள்கின்றனர்.
23% பெண்கள் கண்தான் தனக்கு அழகு என்கின்றனர். 20% பெண்கள் மார்பக அழகை குறிப்பிடுகின்றனர். ஆளைவிட அறிவுதான் முக்கியம் என்று கூறுவது 13% பெண்கள் மட்டுமே. அழகை அதிகப்படுத்துவதற்காக எந்த உறுப்பை மாற்றிக் கொள்ள விரும்புவீர்கள் என்று கேட்டால், நீண்ட அழகிய கால்களுக்கு அதிகபட்சமாக 41% பேர் வாக்களிக்கின்றனர். பின்னர், மெல்ல மெல்ல அவர்களுக்கு பொறுப்பு, கடமைகள் அதிகமாகிறது. நட்பு, உறவு வட்டாரம் பெரிதாகிறது. கணவன், குழந்தைகள், குடும்பம் என செட்டில் ஆகின்றனர். இதனால், தன்னம்பிக்கை அதிகரிக்கிறது. 32 வயதில் அவர்களது தன்னம்பிக்கை உச்சத்தை தொடுகிறது. இவ்வாறு சர்வே ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது.